(பாதாள குழுத் தலைவர் மஞ்சு விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி)
பாதாள குழு தலைவர் என அடையாளம் காணப்பட்ட தடல்லகே மஞ்சு எனும் பெயருடைய நபர் வத்தளை பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சற்றுமுன்னர்(02:00) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வத்தளை பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப் படையினரின் குழுவொன்று குறித்த நபரை கைது செய்ய முற்படுகையில் பதிலுக்கு தாக்கி தப்பிச் செல்ல முற்படுகையிலேயே அதிரடிப் படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் மேலும் பாதாள குழு அங்கத்தவர்கள் இருவர் கைதாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.