(முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேல்முறையீட்டு நீதிமன்றில் மறுபரீசிலனை மனுத் தாக்கல்)
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று(23) மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மறுபரிசீலனை மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
மேல் நீதிமன்றினால் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் எவன்கார்ட் வழக்கில் இருந்து தான் மற்றும் மற்ற தனிநபர்களை விடுவிக்குமாறு கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எவன்கார்ட் நிறுவனத்திற்கு காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை நடத்திச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 11.40 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு, தான் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனவும் கோரி இதற்கு முன்னரும் மேல்நீதிமன்றில் கோட்டபாய மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.