(எதிர்வரும் 26ம் திகதி முதல் முச்சக்கர வண்டிகளின் குறைந்த கட்டணம் ரூபா.60)
முச்சக்கர வண்டியின் உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பினால் எதிர்வரும் 26ம் திகதி முதல் வாடகை முச்சக்கர வண்டிகளின் குறைந்த கட்டணமான ரூபா.50, ரூபா.60 ஆக அதிகரிக்கப்படும் என இலங்கை சுய தொழில் வல்லுனர்களது தேசிய முச்சக்கர வண்டிகளது சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கு மேலதிகமாக குத்தகை நிறுவனங்களால் முச்சக்கர வண்டிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் போலியான முச்சக்கர வண்டிகளது உதிரிப்பாகங்கள் குறித்தும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எதிர்வரும் 26ம் திகதி முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்ய உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.