• Sun. Oct 12th, 2025

“இலங்கைக்கு எதிராக உலகளாவிய சட்ட அதிகாரம்” – ஹுசேன்

Byadmin

Mar 8, 2018
சிறிலங்காவில் பொறுப்புக்கூறலுக்கான நகர்வுகளில் முன்னேற்றங்கள் இல்லாத நிலையில், உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு உறுப்பு நாடுகளிடம் கோரவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்  செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,
‘சிறிலங்காவில் இன மற்றும் மத சிறுபான்மையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வன்முறைகளை அடுத்து, நாடளாவி ரீதியாக அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் எச்சரிக்கை அடைந்துள்ளேன்.
சிறிலங்கா அரசாங்கம் நிலைமாறு கால நீதி நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அர்த்தமுள்ள முன்னேற்றங்கள் இல்லாமையையிட்டு நான் கவலையடைகிறேன்.
பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறு கால நீதியின் முன்னேற்றங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் அவசியமானது.
இதில் முன்னேற்றங்கள் இல்லாத நிலையில், உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு உறுப்பு நாடுகளை ஊக்குவிக்கவுள்ளேன்.
இதுதொடர்பாக எதிர்வரும் 21ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முழுமையான விளக்கம் அளிக்கவுள்ளேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *