முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் மாத்திரம் இலக்றிக் ஷோட் ஆவது எப்படி என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் மறிக்கார் பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக வினவியுள்ளார்.
இது விடயமாக மேலும் தெரியவருவதாவது..
நேற்று மருத்துவ சிகிற்சைக்காக அமெரிக்கா சென்று நாடு திரும்பிய பிரதமரை சந்திக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜீப் ரஹ்மான் மற்றும் மரிக்கார் ஆகியோர் விமான நிலையத்திற்கு சென்றிருந்த வேளை மஹியங்கனை தீ சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் குறித்த இருவரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதன்போது பதில் அளித்துள்ள பொலிஸ் மா அதிபர் ,
மஹியங்கனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி இது ஒரு விபத்து என கூறியதாகவும் விபத்து ஏற்பட முன்னர் அப்பிரதேசத்துக்கு மின் தடை ஏற்பட்டு பின்னர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த கடை உரிமையாளரும் அவ்வாறே வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தன்னிடம் கூறியதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு குறுக்கிட்டுள்ள எஸ் எம் மரிக்கார் நீங்கள் இப்படி கூறுகிறீர்கள் இதை எமது மக்களிடம் கூறினால் முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் மாத்திரம் இலக்றிக் ஷோட் ஆவது எப்படி என மக்கள் எம்மிடம் கேட்கிறார்கள் அதையும் கொஞ்சம் சொன்னால் எமக்கு பதில் அளிக்க இலகுவாக இருக்கும் என நக்கலாக குறிப்பிட்டுள்ளார்.
உங்களுடன் இது விடயமாக பேசிப் பயன் இல்லை என மரிக்கார் கூறியுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் குறிப்பிட்டார்.