இலங்கையின்முதல் முஸ்லிம் சட்ட சபை உறுப்பினர் Dr.M.C அப்துல் ரகுமான். வெளிகமையில் பிறந்த இவர் கொழும்பில் வர்த்தகம் செய்தவர். 1876 இல் கொழும்பு மாநகர சபை உறுப்பினராக நியமனம் பெற்றார். 1889 இல் சட்ட சபை உறுப்பினரானார். தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் இருக்கும் சிறிக்கொத்தா காணி இவரால் அன்பளிப்பு செய்யப் பட்டது. பொறல்ல கனத்தை மயானம் உள்ள பகுதி இவரது குதிரைகளின் மேய்ச்சல் தரை. சகோதர சமூகத்தினருக்கு மயானம் தேவை என்பதால் அதனை அன்பளிப்பு செய்தார். சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் “மும்தாஜ் மஹால்”. இது அப்துல் ரகுமானின் மகளுக்காக கட்டப் பட்ட வீடு. இதனையும் அவர் அன்பளிப்பு செய்தார்.
-வசந்தம் FM –