அசீஸ் மன்ற ஏற்பாட்டிலான விஷேட துஆப் பிராத்தனையூம் இப்தார் நிகழ்வூம் கடந்தவார இறுதியில் கொழும்பு சுல்தான் ஹோட்டலில் அஷ்ரப் அஸிஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின்போது எமக்கு நெருக்கமான உறவூகளாக இருந்து மறைந்த ஏ. அஸீஸ், எம்.எச்.எம். அஷ்ரப், அலவிமெலானா, எம்.எச்.எம் அஷ்ரப், எம்.எச்.முஹம்மத், அஷ்ரப் ஹூசைன், பாயிக் மக்கீன், முஸ்லீம் மீடியா போரத்தின் போரத்தின் பொருளாளர்; ஹனிபா.எம். பாயிஸ், மூத்த ஊடகவியலாளர்; எம்.ஏ.எம் நிலாமின் புதல்வர்; எம்.என்.எம். ரிஸான் ஆகியோர் மீதான யாசீன் சூறா ஓதப்பட்டு துஆப் பிரார்த்தனையும் மௌலவி முஸ்தபாவினால் நிகழ்த்தப்பட்டது.
இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சா; ஏ.எச்.எம் அஸ்வர்;, சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார்;. மறைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.
-அஷ்ரப் ஏ சமத் –