(மகிழ்ச்சி .. மனோ கணேசனுக்கு மேலதிக அமைச்சுப் பொறுப்பு)
அமைச்சர் மனோவுக்கு மேலதிக அமைச்சுப்பொறுப்புகள் ஜனாபதியினால் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்த தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சு பொறுப்புகள் இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் மனோ கணேசனுக்கு மேலதிகமாக மாற்றப்பட்டுள்ளன.
அமைச்சரிடம் ஏற்கனவே தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரச கரும மொழிகள் அமுலாக்கல் அமைச்சுப் பொறுப்புக்களே இருந்த நிலையில் இந்த அமைச்சுக்கள் அவருக்கு சேர்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.