(சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்கும் பணிகள் 15 உடன் நிறைவு)
2018 ஆண்டு க. பொ. த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி , குறித்த விண்ணப்பத்தை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். தாமதமாக கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த தினத்திலோ அல்லது அதற்கு முன்னரோ கிடைக்கும் வகையில் பரீட்சை விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சை திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.