(இலங்கை ஸ்பின் – வேகப் பந்துவீச்சுக்களை வலுப்படுத்த ஆஸியிடமிருந்து இருவர்)
எதிர்வரும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான சுற்றுப்பயணத்தினை நோக்காகக் கொண்டு இலங்கை அணிக்கு, அவுஸ்திரேலிய ஸ்பின் பந்துவீச்சு மற்றும் வேகப் பந்துவீச்சு ஆலோசகர்கள் இருவரது ஒத்துழைப்பினை இரு வாரங்களுக்கு பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, Peter Sleep மற்றும் Timothy McCaskill ஆகிய ஆலோசகர்கள் கடந்த புதன்கிழமை(09) பல்லேகல மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்ட பயிற்சிப் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலா இலங்கை அணி மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாவது போட்டி எதிர்வரும் ஜூன் 06ம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.