(பலஸ்தீன “நக்பா” தினத்தை ஆரம்பித்து வைத்த மஹிந்த ராஜபக்ஷ)
பலஸ்தீன மக்களின் வெளியேற்றத்தைக் குறிக்கும் “நக்பா” தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி கொழும்பில் நடைபெற்றது.
கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகம் முன்னாலிருந்து நடைபெற்ற குறித்த பேரணியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்.
இந்தப் பேரணி ஹோர்ட்டன் பிளேஸ், லிப்டன் சுற்றுவட்டம், யூனியன் பிளேஸ் மற்றும் காலி முகத்திடல் வழியாகச் சென்று மீண்டும் பலஸ்தீன தூதரகத்தை வந்தடைந்தது.
இந்த நிகழ்வில் டுபாய், துருக்கி மற்றும் ஓமான் நாட்டு இலங்கைக்கான தூதுவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அதேவேளை குறித்த நிகழ்வில் கொழும்பில் உள்ள சவுதி தூதர் பங்கேற்வில்லை என அறியவருகிறது. இதனை மூத்த ஊடகவியலாளர் ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.