(ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோருகிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்)
நாடளாவிய ரீதியிலான வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக சந்திப்பு ஒன்றுக்கு வாய்ப்பை வழங்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளது.
கொழும்பில் நேற்று(14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கேவினால் குறித்த இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூருடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவைக்கும் உரிய முறையில் விளக்கமளிக்கப்படவில்லை என மருத்துவர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிடாவிட்டால், தொடர் வேலை நிறுத்தத்தினை மேற்கொள்ளப் போவதாக செயலாளர் ஹரித்த அலுத்கே மேலும் அரசுக்கு எச்சரித்துள்ளார்.