(யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 09 வருடங்கள் நிறைவு)
இலங்கையில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்து இன்றுடன்(18) 09 வருடங்கள் பூர்த்தியாகின்றதினை முன்னிட்டு 09வது இராணுவ வீரர்கள் தினம் நாளை(19) கொண்டாடப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாராளுமன்ற மைதானத்தில் இராணுவ வீரர்கள் நினைவுச் சின்னம் அருகே குறித்த இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அதேபோல் , நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் முகமாக இலங்கை இராணுவம் நடாத்தும் அலோக பூஜா களனி ரஜமகா விகாரையில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வுகள் கடற்படை , விமானப்படை , காவற்துறை , சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஆதரவின் கீழ் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது , ஜனாதிபதி தலைமையில் நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த 28,619 இராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையில் விளக்கேற்றும் நிகழ்வொன்றும் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் , முப்படை தளபதிகள் , காவற்துறை மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் போன்று உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.