(தெற்கில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கான காரணம் சுகாதார ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிப்பு)
தெற்கில் கடந்த சில நாட்களாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கான காரணத்தை கண்டறிய தொடர்ச்சியாக சுகாதார ஆராய்ச்சியாளர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
எனினும் இன்றைய தினமே இந்த காய்ச்சலுக்கான காரணத்தை சுகாதார ஆராய்ச்சி பிரிவு கண்டு பிடித்துள்ளது. இன்புளுவென்ஸா மற்றும் அடினோ உட்பட இன்னும் பல வைரஸ் மூலமே இந்த காய்ச்சல் தொற்றி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த காய்ச்சல் காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 600 க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உயிரிழந்த பிள்ளைகளின் உடலை ஆராய்சிகளுக்காக சுகாதார ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜயம்பதி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் கராபிட்டி வைத்தியசாலையில் மட்டும் 37 பிள்ளைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் 27 பிள்ளைகள் 02 வயதுக்கும் குறைவானவர்கள் என தெரியவந்துள்ளது.
இவர்களுக்கு தொற்றியுள்ள காய்ச்சல் இன்புளுவென்ஸா உட்பட இன்னும் பல வைரஸ் தொற்று காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் ஜெயமபதி மேலும் தெரிவித்தார்