• Sat. Oct 11th, 2025

Month: November 2017

  • Home
  • தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ரோசி’யை களமிறக்குகிறது ஐ.தே.கட்சி..

தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ரோசி’யை களமிறக்குகிறது ஐ.தே.கட்சி..

தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ரோசி’யை களமிறக்குகிறது ஐ.தே.கட்சி.. முன்னாள் அமைச்சரும், கொழும்பு மேற்கு அமைப்பாளருமான ரோசி சேனநாயக்கவை இம்முறை கொழும்பு மாநகர சபைத் தேர்தலில், முதல்வர் வேட்பாளராக களமிறக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோசி…

போக்குவரத்து சட்ட மீறல்களுக்கான 25,000 ரூபா தண்டப்பண சட்டம் இன்று முதல் அமுலுக்கு…

போக்குவரத்து சட்ட மீறல்களுக்கான 25,000 ரூபா தண்டப்பண சட்டம் இன்று முதல் அமுலுக்கு… போக்குவரத்து சட்ட மீறல்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 25,000 ரூபா தண்டப்பண சட்டம் இன்று(01) முதல் அமுலாவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி…

அதிசயக் கிணறு கண்டுபிடிப்பு! இலங்கையில்…

அதிசயக் கிணறு கண்டுபிடிப்பு! இலங்கையில்… கேகாலையில் பல்வேறு நுட்பங்கள் அடங்கிய கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடிநீரில் உப்புத்தன்மையை நீக்கி நீரை பாதுகாப்பதற்கு அவசியமான தொழில்நுட்பம் இந்த கிணற்றில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கேகாலை- ரம்புக்கன வீதியின் பத்தமுரே நவகமுவ பழைய தேவாலயத்திற்கு அருகில்…

பிரதேச சபை தேர்தல்… வர்த்தமானியில் கையெழுத்திட்டார் அமைச்சர் பைசர் முஸ்தபா

பிரதேச சபை தேர்தல்… வர்த்தமானியில் கையெழுத்திட்டார் அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரத்தை வழங்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 11 மணிக்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கான ஆவணத்தில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர்  முஸ்தபா கையொப்பமிட்டதாக அவரது அமைச்சு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். சர்ச்சையில் இருந்த மேலதிக நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளை அமைக்க நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாந்தி எடுத்து அவமானப்பட்ட மாணவிக்கு உளவியல் பரிசோதனை

வாந்தி எடுத்து அவமானப்பட்ட மாணவிக்கு உளவியல் பரிசோதனை உணவு உட்கொள்ளாமையால் வாந்தி எடுத்து அவமானப்பட்ட மாணவியை சட்ட வைத்திய அதிகாரி மூலம் உளவியல் மருத்துவரிடம் காண்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் குறித்த மாணவி உளவியல் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளாரா என்பது…

2019 ஆம் ஆண்டில் 300 அரச வைத்தியசாலைகள் டிஜிட்டல் மயப்படுத்தும் ; டொக்டர் ராஜித

2019 ஆம் ஆண்டில் 300 அரச வைத்தியசாலைகள் டிஜிட்டல் மயப்படுத்தும் ; டொக்டர் ராஜித 2019 ஆம் ஆண்டில் 300 அரச வைத்தியசாலைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் ஹொரன ஆதார வைத்தியசாலையில் ஆரப்பிக்கப்படும் என்று சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ…

32 இலட்சம் டெண்டர் பணம் செலுத்தி இறைச்சிக்கடையை கொள்வனவு செய்த பெளத்த பிக்கு

32 இலட்சம் டெண்டர் பணம் செலுத்தி இறைச்சிக்கடையை கொள்வனவு செய்த பெளத்த பிக்கு மத்துகம பிரதேச சபையினால் பொதுச் சந்தையில் நடத்திச்செல்லப்பட்ட இறைச்சிக் கடை ஒன்றை களுபஹனசேலதெலாராமய விகாரையின் விகாராதிபதி மாவிட்டஞானரத்ன தேரர் கேள்விப்பத்திரம் மூலம் கொள்வளவுசெய்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், மத்துகம பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளை மூடுவதற்குபௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து தீர்மானம் எடுத்தோம். பிரதேச அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்ததுடன், நகரநிர்வாக சட்டத்திற்கமைய இது தொடர்பில் தீர்மானமொன்றைஎடுப்பதற்கு அவர்களால் முடியவில்லை என்றும்தெரிவித்துள்ளார். இதனால், 2018ஆம் ஆண்டு கோள்விப் பத்திரத்தின் போதுவிண்ணப்பித்து, கடையை பெற்று மூடுவதற்குதீர்மானித்ததாகவும் கூறியுள்ளார். இதேவேளை, குறித்த கடையை 3,225,622 ரூபா செலுத்தி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கேள்விப்பத்திரம் மூலம் பெறப்பட்ட இறைச்சிக்கடை ஒன்றை மூடிவிட முடியாது என்று பிரதேச செயலாளர்கூறியதாகவும் மாவிட்ட ஞானரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.