6 பில்லியன் ரூபாவை, இலாபம் ஈட்டிய இலங்கை கிரிக்கெட்
(6 பில்லியன் ரூபாவை, இலாபம் ஈட்டிய இலங்கை கிரிக்கெட்) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கடந்த வருடத்திற்கான கணக்காய்வு அறிக்கை விளையாட்டுத்துறை அமைச்சரான பைஸர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவரான திலங்க சுமதிபால இன்று பிற்பகல் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு சென்று…
பரவும் மர்ம நோய்.. இதுவரை 5 பேர் உயிரிழந்தனர்
(பரவும் மர்ம நோய்.. இதுவரை 5 பேர் உயிரிழந்தனர்) தென் மாகாணத்தில் பரவி வரும் மர்மமான நோயினால் கடந்த மாதத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதால் இந்த நோய் தொடர்பில், சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த மர்மமான நோயானது, அசாதாரணமாக நோயாளிகளின்…
12.5% பேரூந்து கட்டண உயர்வு தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் 22ம் திகதி அமைச்சரவைக்கு
(12.5% பேரூந்து கட்டண உயர்வு தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் 22ம் திகதி அமைச்சரவைக்கு) குறைந்தபட்ச பேரூந்து கட்டணத்தை 12 ரூபாவாக அதிகரிப்பது மற்றும் நூற்றுக்கு 12.5 சதவீத பேரூந்து கட்டண உயர்வுடன் தொடர்புடைய அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(22) கூடவுள்ள அமைச்சரவை…
அரச வைத்திய அதிகாரிகளது வேலைநிறுத்தம் ஆரம்பம்
(அரச வைத்திய அதிகாரிகளது வேலைநிறுத்தம் ஆரம்பம்) அரச வைத்திய அதிகாரிகள் இன்று(17) காலை 8.00 மணி முதல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்து கொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த இந்த…
பலஸ்தீன “நக்பா” கொள்கை மாறாத மஹிந்தையும், மறு பரிசீலனை செய்ய வேண்டிய மக்களும்
(பலஸ்தீன “நக்பா” கொள்கை மாறாத மஹிந்தையும், மறு பரிசீலனை செய்ய வேண்டிய மக்களும்) பலஸ்தீன மக்களின் அவலப் போராட்டம், நீண்ட வரலாற்றைக் கொண்டது, அது அவர்களின் போராட்டம் மட்டுமல்ல, உலக முஸ்லிம்களின் முதலாவது கிப்லாவை மீட்பதற்கானதும், சர்வதேச மட்டத்தில் ஒடுக்கப்படும் மக்களை…
காஸாவில் இஸ்ரேல் அராஜகம், உலக தலைவர்களுடன் எர்துகான் ஆலோசனை
(காஸாவில் இஸ்ரேல் அராஜகம், உலக தலைவர்களுடன் எர்துகான் ஆலோசனை) ஈராக், இந்தோனிஷியா, சூடான், கத்தார் போன்ற நாட்டு பிரதமர்களிடம் காஸா பிரச்சினை குறித்து எர்துகான் பேசிவருகிறார். காஸா பிரச்சினைக்கு ஒரு அமைதி நிலைபாட்டை முன்னெடுக்க இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று…
“மனித உரிமைககளை கடைபிடிக்க முடியாது” – இஸ்ரேல்
(“மனித உரிமைககளை கடைபிடிக்க முடியாது” – இஸ்ரேல்) உலகம் முழுவதும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக பொதுமக்கள் போராடிக் கொண்டிருக்க, தனது தாக்குதல்கள் குறித்து இஸ்ரேலிய அரசு “இந்த தாக்குதல்கள் ஒரு நாட்டுக்காக நடக்கும் போர் என்பதால் இதில் மனித உரிமைகள் சம்பந்தமான…
புதிய பேரூந்து கட்டண விவரங்கள்
(புதிய பேரூந்து கட்டண விவரங்கள்) பேரூந்து கட்டணமானது 6.56% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ள அடிப்படையில், புதிய கட்டண விவரங்களை, தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய கட்டணங்கள், இன்று(16) முதல் அமுலுக்கு வருவதாக, போக்குவரத்துப் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சரவைத்…
“பலஸ்தீன் இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்கா பக்கச் சார்பாக நடந்துகொள்கிறது” – நாமல்
பலஸ்தீன் இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்கா பக்கச் சார்பாகநடந்துகொள்வதாக ஹம் பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷ குறிப்பிட்டார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியஅவர் மேலும் கூறுகையில், அமெரிக்காவின் தலையீடு எங்கொல்லாம் உள்ளதோ அங்கெல்லாம்பிரச்சினைகள் குறைத்த வரலாறு இல்லை மாறாக பிரச்சினைகள் அதிகரித்தவரலாறுகளே உள்ளன. இஸ்ரேல் பலஸ்தீன் விவகாரத்தில் அமெரிக்காவின் செயற்பாடு எரியும் நெருப்பில்எண்ணெய் ஊற்றுவதாக அமைந்துள்ளது. இஸ்ரேல் தலைநகர் ஜெரூசலம் என அமெரிக்கா கடந்த வருடம் அறிவித்ததோடுஇஸ்ரேல் டெல் அலிவ் நகரில் இருந்த தமது தூதரகத்தை ஜெருசலத்திற்குமாற்றுவாதாக அறிவித்திருந்த அதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர்தமது தூதரகத்தை ஜெரூசலத்தில் திறந்துவைத்தது. அமெரிக்காவின் இந்த செயற்பாடு பலஸ்தீனர்கள் மற்றும் அவர்களின்நேசநாடுகளுக்கு கடும் கவலையையும் ஆத்திரத்தையும் ஏற்பட்டுத்தியதுடன்பலஸ்தீனில் மோதல்களை மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்திருந்தது. இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு பலஸ்தீனர்களைநெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அமைந்திருந்த போதும் உலக நாடுகள் இதுதொடர்பில் மவுனமாகவே உள்ளன. கடந்த சில தினங்களாக காஸாவில் பாரிய மோதல் வெடித்துள்ள நிலையில் பலர்கொல்லப்பட்டுள்ளனர்.ஐரோப்பாவில் இடம்பெறும் சிறு சம்பவங்களுக்கெல்லாம்கண்டணம் தெரிவிக்கும் இலங்கை அரசு பலஸ்தீன விவகாரத்தில் இதுவரை எந்தகண்டத்தையும் வெளியிடவில்லை. இந்த அரசாங்கள் அமெரிக்கா போடும் தாளத்திற்கு ஆடும் பொம்யாகசெயற்படும் அதேவேளை நியாயத்தின் பக்கம் நிற்காமல் செயற்பட்டு வருகிறதுஎன குறிப்பிட்டார். மேலும் பலஸ்தீனுடனான உறவை கௌரவிக்கும் வகையிலேயே அந்த நாட்டு அரசுமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பெயரை அங்குள்ள வீதிக்குபெயரிட்டு அவரை கௌரவித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். பலஸ்தீனில் அப்பாவிகள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அங்குநிறந்தர சமாதானம் ஏற்பட உலகம் ஒன்றினைய வேண்டுமெனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -ஊடகப்பிரிவு-
அரச வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில்
(அரச வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில்) அரச வைத்தியர்கள் நாளை(17) ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (17) காலை 8.00 மணி முதல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும்…