• Wed. Jun 10th, 2026

Month: March 2022

  • Home
  • உக்ரேனில் உள்ள (27) இலங்கையர்கள் அங்கு தொடர்ந்து தங்கியிருக்க விருப்பம் தெரிவிப்பு.

உக்ரேனில் உள்ள (27) இலங்கையர்கள் அங்கு தொடர்ந்து தங்கியிருக்க விருப்பம் தெரிவிப்பு.

உக்ரேனில் உள்ள 27 இலங்கையர்கள் தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். பெலருஸில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு கட்டணம் அறவிடப்படாமல்…

மொத்தம் 204,345 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதிகளில் மொத்தம் 204,345 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் அதிகளவானோர் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி ரஷ்யாவிலிருந்து மொத்தம் 32,375 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு…

எரிபொருளின் விலையை அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் – காமினி லொகுகே

எரிபொருள் விநியோக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு இன்று அல்லது நாளையுடன் தீர்வு கிடைக்கப்பெறும். உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையை அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என வலுசக்தி துறை…

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் ஊடாக எவரது சுதந்திரத்தை வரையறுக்க எதிர்பார்ப்பதி்ல்லை – நீதி அமைச்சர் அலிசப்ரி

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம்  ஊடாக ஊடகவியலாளர்களினதோ அல்லது வேறு யாரினதும் சுதந்திரத்தை வரையறுக்க நாங்கள் எதிர்பார்ப்பதி்லலை. அத்துடன் குறித்த நபரின் விருப்பத்துக்கு மாற்றமாக அவரின் தனிப்பட்ட தரவுகளை வேறு யாருக்கும் பயன்படுத்த முடியாது. அத்துடன்  ஊழல் மோசடிகளை தடுப்பதாக இருந்தால்…

பன்றியின் இதயத்தை பொருத்திய மனிதர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று உயிரிழப்பு.

பன்றியின் மரபணு மாற்றப்பட்ட இதயத்தை, பொருத்திஇருந்த மனிதர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் மேரிலாந்து நகரைச் சேர்ந்த டேவிட் பென்னட்க்கு(57) இதயம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இதயம் தொடர்ந்து செயலிழந்து வந்தது, வேறு…

இன்று 3 3/4 மணிநேரம் மின் வெட்டு

நாடளாவிய ரீதியில் 3 3/4 மணிநேரம் மின்வெட்டினை மேற்கொள்வதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. A,B,C,D,E,F,G,H,I,J,K,L…

நேற்றைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களின் முழு விபரம்

01. பொருளாதார பேரவையை நிறுவுதல் பெருநிலைப் பொருளாதாரக் கொள்கை, கொவிட் – 19 பெருந்தொற்று நிலைமையின் பின்னர் தேசிய பொருளாதாரத்தின் செயற்பாடு, பொருளாதார மீள்கட்டமைத்தல், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய அபிவிருத்திக் கருத்திட்டங்கள்…

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி 230/= ஆக வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி 230 ரூபாவாக குறைத்துள்ளது. வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பக்கத்தில் அண்மைக்கால அபிவிருத்திகளினையும் பரிசீலனையிற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த…

இன்று சர்வதேச மகளிர் தினம்

இன்று சர்வதேச மகளிர் தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்துக்கு ஐ.நா. மகளிர் அமைப்பு ஒரு கருப்பொருளை முன்மொழிகிறது. அதன்படி இந்த ஆண்டு ‘சிறப்பான வாழ்க்கைக்குச் சமநிலை’ என்ற கருப்பொருள் முன்மொழியப்பட்டுள்ளது. பெண்களை போற்றும் விதமாகவும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாகவும்…

12 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு கொவிட் தொற்று

நாட்டில் இதுவரையில் 12 000 இற்கும் அதிக கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர், இவர்களில் 61 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர்.  தொற்றுக்கு உள்ளானவர்களில் 5000 இற்கும் அதிகமானோர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் என்று சுகாதார அமைச்சின் குடும்ப நல சுகாதார பிரிவின்…