அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதில் சிக்கல் – மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர நிறுவனங்கள் தங்களது நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதன் விளைவாக, விநியோகஸ்தர்கள் தொடர்ந்தும் இலங்கைக்கு மருந்துகளை வழங்குவதில் ஆர்வம் காட்டவில்லை…
பரசிட்டமோலுக்கான அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு
சுகாதார அமைச்சினால் 500 மில்லிகிராம் பரசிட்டமோல் வில்லையொன்றின் அதிகபட்ச சில்லறை விலையை 2 ரூபா 30 சதமாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 28 முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.…
பெலருஸிலுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பாக பிரதமரின் உத்தரவு
பெலருஸில் உயர்கல்வியில் ஈடுபடும் இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவும் மோதல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும்…
பல பகுதிகளுக்கான மழை நிலைமை அதிகரிக்க கூடிய சாத்தியம்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை இன்று இரவிலிருந்து 04 ஆம் திகதி வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான…
பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது – திலும் அமுனுகம
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது. எரிபொருள் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டால் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இன்று 7 1/2 மணிநேர மின்வெட்டு
நாடளாவிய ரீதியில் இன்று ஏழரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதியினை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. அதன்படி காலை 8.00 மணி முதல் மாலை 6.00…
மின் நெருக்கடியை தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி
நாட்டில் நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும், பொது மக்களுக்கும் உறுதியளித்துள்ளார். இதேவளை திறைசேரியும் இலங்கை மத்திய வங்கியும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்…
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விஷேட பொலிஸ் பாதுகாப்பு – பொலிஸ் மா அதிபர்
நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அருகே, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டிருக்கும் நீண்ட வாகன வரிசையை மையப்படுத்தி இடம்பெறலாம் என சந்தேகிக்கப்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கையாள பொலிஸ் மா அதிபர் விஷேட உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளார். மகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட…
வட்டவளை காட்டுப்பகுதியில் தீ பரவல்
வட்டவளை- மௌன்ஜீன் தோட்டப்பகுதிக்குட்பட்ட மலைதப்பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இனந்தெரியாதோரால் குறித்த பகுதிக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, குறித்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட்டவளை பொலிஸார் மேலும்…
நாளை 7 1/2 மணிநேர மின் வெட்டு
நாளைய தினம் 7 1/2 மணிநேர மின் வெட்டினை மேற்கொள்வதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைவாக அனைத்து பகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணி நேரம்…