தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்: வெளியாகியுள்ள தகவல்
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு காரணமாக தென்னிலங்கை தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தேயிலை தொழிற்சாலைகள் எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு என்பன காரணமாக ஏராளம் நெருக்கடிகளை தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் எதிர்கொண்டுள்ளனர். அத்துடன் உற்பத்திக்கான செலவும்…
வரிச் சட்டங்களை திருத்த அனுமதி
வரிச் சட்டங்கள் பலவற்றை திருத்துவதற்குத் தேவையான யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி
அத்தியாவசியமான பொதுச் சேவைகளை இடையூறு இன்றிப் பேணுவதற்குத் தேவையான நிதியை வழங்குவதற்கான குறைமதிப்பீட்டு மதிப்பீட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் வரவு செலவுத் திட்ட ஆதரவு சேவைகள் மற்றும் அவசரகாலப் பொறுப்புத் திட்டங்களின் கீழ்…
மேலும் ஒரு கப்பல் இந்த வார இறுதியில் இலங்கைக்கு
மேலும் 25,000 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் ஒன்று இந்த வார இறுதியில் நாட்டை வந்தடையும் என லிட்ரோ தெரிவித்துள்ளது. இதேவேளை இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நாள்தோறும் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இவற்றில் 60…
சசி வீரவன்ச பிணையில் விடுதலை.
போலி கடவுச்சீட்டு வழக்கில் சசி வீரவன்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு எடுத்த முடிவு எனது அரசியல் வாழ்க்கையில் எடுத்த கடினமான முடிவாகும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு எடுத்த முடிவு எனது அரசியல் வாழ்க்கையில் எடுத்த கடினமான முடிவாகுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் நேற்று (30) நடைபெற்றது. அதிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த…
சில பிரதேசங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை எதிர்பார்ப்பு..
நாடு முழுவதிலும் நிலவுகின்ற காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை இன்றும் அடுத்துவரும் சில தினங்களிலும் ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை…
அட்டுலுகம சிறுமி விவகாரம்! குற்றத்தை ஒப்புகொண்ட 29 வயதுடைய சிறுமியின் உறவினர்
அட்டுலுகம சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சிறுமியின் உறவினர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதேவேளை பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியாகியுள்ளது. குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விதைப்பது எதுவோ அதுவே விளையும்.
விதைப்பது எதுவோ அதுவே விளையும். நம் செயல்களைப் பொறுத்தே நாம் சுமக்கும் பிள்ளைகளின் செயற்பாடுகள் இருக்கும். வளர்ச்சி முறையாக இருந்தால் வளர்ப்பு சரியாக அமையும். இன்ஷா அல்லாஹ். யா அல்லாஹ் இந்த தாய்மை பாக்கியத்தை அனைவருக்கும் கொடுத்து ,அந்த பிள்ளைகளை சாலிஹான…
இலங்கையில் உள்ள பிலிப்பைன்ஸ் குடிமக்களை திருப்பி அனுப்புமாறு உத்தரவு!
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் தங்கியுள்ள பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு பிலிப்பைன்ஸ் உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிலிப்பைன்ஸ் துணை தூதரகத்துக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.