ஹஜ் யாத்திரைக்காக 1500 இலங்கையர்களுக்கு அனுமதி!
2022ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக, சவூதி அரேபியா, இலங்கைக்கு 1585 இடங்களை ஒதுக்கியுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் விஷேட அறிவிப்பு
மேலும் 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் நாளை கொழும்பை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை பிற்பகல் 1 மணிக்கு இந்த கப்பல் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பான விசாரணைகள் C.I.D யினரிடம் ஒப்படைக்கப் பட்டது.
சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை காணாமல் போன ஒன்பது வயது சிறுமியின் ஜானாசா நேற்று பண்டாரகம, அதுலுகமவில் உள்ள அவரது வீட்டின் பின்புறமுள்ள சதுப்பு நிலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.…
SDIG அஜித் ரோஹண உள்ளிட்ட மூவர் இடமாற்றம்
பொலிஸ் உயரதிகாரிகள் சிலர் இடமாற்றப்பட்டுள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொது சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபரினால் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, குற்ற மற்றும் போக்குவரத்து பிரிவின்…
பாத்திமா ஆய்ஷாவை தேடும் பணியில் 4 பொலிஸ் குழுக்கள்!
காணாமல் போயுள்ள 9 வயது பாத்திமா ஆய்ஷாவை தற்போது நான்கு பொலிஸ் குழுக்கள் தேடி வருகின்றன. இதற்கமைய, சிறுமியின் தந்தையிடம் விசாரணைக் குழு நீண்ட நேரம் விசாரித்து வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த…
எரிசக்தி அமைச்சர் வௌியிட்டுள்ள ட்விட்டர் பதிவு!
நாட்டிற்கு நாளைய தினம் (29) டீசல் ஏற்றிய கப்பல் ஒன்று வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அமைச்சர் இதனை தெரித்துள்ளார். மேலும், கச்சா எண்ணெய் தொகையொன்று தற்போது தறையிறக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல்,…
ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீத வளர்ச்சி.. இந்த வருடம் 6 பில்லியன் டொலர் வருமானம் ஈட்ட உள்ளோம்
ஆடைத் தொழிற்துறையில், இந்த ஆண்டில், 6 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டுவதற்கான இலக்கை எட்டக்கூடியதாக இருக்கும் என ஒன்றிணைந்த ஆடைத்தொழிற்துறை சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. பொருளாதார தளம்பல் நிலை காணப்படுகின்ற போதிலும், ஆடைத் தொழிற்துறை வலுவான நிலையில் உள்ளதாக அந்த சங்கத்தின்…
2 வருடங்களின் பின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஜப்பான் அனுமதி வழங்க தொடங்கியது.
சுமார் இரண்டு வருடங்களின் பின்னர் ஜப்பான் அரசு வெளிநாட்டு பயண கட்டுப்பாடுகளை, மெதுவாக தளர்த்த தொடங்கியிருக்கின்றது. கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து முற்றும் மூடப்பட்ட, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாத்துறை, எதிர்வரும் ஜுன் 1ம் திகதி முதல்…
பொதுமக்கள் தமக்குத் தேவையான உணவுப் பயிர்களை தமது வீடுத்தோட்டங்களிலேயே உற்பத்தி செய்யவும்
பொதுமக்கள் தமக்குத் தேவையான உணவுப் பயிர்களை தமது வீடுத்தோட்டங்களிலேயே உற்பத்தி செய்யுமாறு விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார…
இலங்கைக்கு உதவ கைக்கோர்த்த ஜப்பான் மற்றும் இந்தியா!
இலங்கையின் நெருக்கடியான சூழலில் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து பணியாற்றுவதற்கு இணங்கியுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் டோக்கியோவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார். இந்திய –…