(மின்சார சபையினால், பெட்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 10 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளது)
இலங்கை பெட்றோலியக் கூட்டுத்தாபனம் செலுத்த வேண்டிய சுமார் 32 பில்லியனுக்கு அதிகமான நிலுவையில் இருந்து 10 பில்லியன் ரூபாவானது கடந்த வாரம் செலுத்தப்பட்டதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்னா ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
பெட்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் பெற்றுக் கொள்ளும்போது சந்தை விலைக்கு ஏற்பவே மின்சார சபை எரிபொருள் கொள்வனவு செய்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.