(மீட்டர் பொருத்தப்படுவது கட்டாயம்… இல்லாவிட்டால் தண்டப் பணம் அறவிடப்படும்.)
முச்சக்கரவண்டியின் கட்டண மீற்றர் ஒரு கிலோ மீற்றருக்கு 60 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டு நடைமுறையில்
செயற்பட்டு கொண்டிருக்கும் வேலையில் தற்போது கட்டண மீற்றர் இன்றிச் செலுத்தப்படும் முச்சக்கர வண்டி சாரதிகளிடம் இருந்து தண்டப் பணம் அறவிடப்படும் என வீதிப் பாதுகாப்புத் தொடர்பிலான தேசிய சபை அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் முதலாம் திகதியில் இருந்து கட்டண மீற்றர் இன்றிச் செலுத்தப்படும் முச்சக்கரவண்டிகளில் சோதனை நடவடிக்கையை பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.