(“பொது ஜன ரள” நாளை(14) ஆரம்பம்)
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஏற்பாட்டில் “பொது ஜன ரள” எனும் பொதுமக்களுக்கான அழைப்பானது நாளை(14) வட மத்திய மாகாணத்திலிருந்து ஆரம்பிக்கப்பட உள்ளதாக குறித்த முன்னணி தெரிவித்துள்ளது.
“அரசுக்கு எதிரான பேரணியில் மக்களின் குரல்” எனும் தொனிப்பொருளில் குறித்த கருத்தரங்கு தொடர் நடைபெறவுள்ளது.
அதன்படி, பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து மெதிரிகிரிய, பொலன்னறுவை மற்றும் மின்னேரியா உள்ளிட்ட ஆசனங்களுக்கும் அநுராதபுர மாவட்டத்தில் கலாவெவ, கெகிராவ மற்றும் மிஹிந்தல ஆகிய ஆசனங்களிலும் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுர மாவட்டத்தில் கலாவெவ ஆசனத்தில் நாளை(14) காலை 09.30க்கு ஆரம்பமாகவுள்ள குறித்த கருத்தரங்கில் பிரதம அதிதியாக பசில் ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளதோடு, பந்துல குணவர்தன, ரோஹித அபேகுணவர்தன, அருந்திக பெர்னாண்டோ, குமார வெல்கம, பிரசன்ன ரணதுங்க, இந்திக அனுருத்த ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும்; அஜித் நிவாட் கப்ரால், பேராசிரியர் நாலக கொடஹேவா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.