(மஹிந்தானந்த’வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…)
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 19ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(23) உத்தரவிட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கீழ் இயங்குகின்ற ஶ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரசின் தலைவராக இருந்த போது குறித்த தொழிற்சங்கத்துக்கு சொந்தமான 39 இலட்சம் ரூபா நிதியை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.