(ஆங்கிலேயர் கால ஆடுப்பாலத்தை பாதுகாக்க கோரி, கண்டி லேவெல்ல மக்கள் வேண்டுகோள்)
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மஹாவலி கங்கையை கடப்பதற்காக நிர்மானிக்கப்பட்ட
கண்டி லேவெல்ல இரும்பு கம்பிப் பாலம் ததற்போது கவனிப்பாரற்ற நிலையில் உள்ளதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தும்பரை பிரதேசத்திற்கு இலகுவாக செல்வதற்காக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிர்மானிக்கப்பட்ட இவ்விரும்பு பாலத்திற்கு பதிலாக பின்னர் புதிய பாலம் ஒன்று அவ்விடத்தில் நிர்மானிக்க்பட்ட பின் இப் பழைய பாலம் கைவிடப்பட்டுள்ளதாகவும் அது தற்போது கவனிப்பாரற்ற நிலையில் உள்ளதாகவும் இப் பாலத்தை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அப் பிரதேச மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
–மொஹொமட் ஆஸிக்–