லட்சத்தீவு மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்தவர் டாக்டர் றஹ்மத பேகம்..
கடந்த நூற்றாண்டில் குறிப்பிட்ட காலம் முன்பு வரை லட்சத்தீவில் அமைந்துள்ள ஆரம்ப பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பெண் குழந்தைகள் கல்வி கிடைத்த கால கட்டத்தில், தனது பெற்றோரின் முற்போக்கு சிந்தனை காரணமாக ஆறாம் வகுப்பு படிக்க தீவுக்கு வெளியே மலப்புறத்துக்கு புறப்பட்ட முதல் மாணவி றஹ்மத பேகம்..
தொடர்ந்து உயர்நிலை, மேல்நிலை கல்வியில் நல்ல ரேங்குடன் தேர்ச்சி பெற்றவருக்கு வாரங்கல் மருத்துவக்கல்லூரியில் அட்மிஷன் கிடைத்து மருத்துவம் படித்து லட்சத்தீவின் முதல் மகப்பேறு மருத்துவர் எனும் பெருமை பெற்றவர்..
தான் கற்ற கல்வியை தனது தீவின் மக்களுக்காக அர்ப்பணிப்பு செய்த டாக்டர் றஹ்மத பேகம், விடுமுறையே எடுக்காமல் தீவு மக்களுக்கு சிகிச்சை வழங்கியவர்..
இவரின் தன்னலம் கருதாத சேவைக்கு நன்றிக்கடனாக தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு றஹ்மத பேகம் என்றே பெரும்பாலோர் பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர்..
இவரின் அர்ப்பணிப்புடன் கூடிய மருத்துவ சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர்..
தற்போது வயது முதிர்வு காரணமாக மலப்புறம் வண்டூரில் மகனுடன் ஓய்வில் இருந்து வரும் டாக்டர் றஹ்மத பேகம், லட்சத்தீவு மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு பாதகமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்…