மேல்மாகாணத்திற்குள் சுகாதார விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் நேற்று 6000 இற்கும் அதிக நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய 706 பொலிஸ் உத்தியோகத்தர்களினால் 3648 மோட்டார்சைக்கிள்களும், 2213 முச்சக்கரவண்டிகளும் இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோன்று 6479 நபர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு, இவர்களில் 1469 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் இவ்வாறான சோதனைகளை முன்னெடுத்து, சுகாதார விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.