கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ரோஹித போகல்லாகம இன்றைய தினம் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார்.
இது தொடர்பான நிகழ்வு திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலத்தில் இடம்பெறும் என்று ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த பதவியேற்பு நிகழ்வு நேற்று (10) இடம்பெறவிருப்பதாக ஆளுநர் அலுவலகம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்று (11) பிற்போடப்பட்டது.
இதேவேளை, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ, ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து ரோஹித போகல்லாகம கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.