• Sun. Oct 12th, 2025

கொழும்பில் நாளை முதல் பஸ் போக்குவரத்துக்கான முன்னுரிமை திட்டம்

Byadmin

Aug 14, 2017

கொழும்பு நகரில் பஸ் போக்குவரத்துக்கென முன்னுரிமை ஒழுங்கையை ஒதுக்கும் திட்டம் நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

பஸ்களுக்கான முன்னுரிமை ஒழுங்கை வேலைத்திட்டம் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை அமுல்படுத்தப்படும்.

இந்த காலப்பகுதியில் குறித்த முன்னுரிமை ஒழுங்கையில் பயணிகள் போக்குவரத்து பஸ்களும், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் மாத்திரம் பயணிக்க முடியும்.

பஸ் தரிப்பிடம் ஒன்றில் பஸ் வண்டி ஒன்று நிறுத்தப்படும் போது பின்னால் வருகை தரும் பஸ் வண்டி முன்னாலிருக்கும் பஸ் பயணத்தை ஆரம்பிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

அதேபோன்று தரிப்பிடத்தில் நிறுத்தும் பஸ் வண்டி தாமதிக்காமல் பயணத்தை மீண்டும் தொடங்க வேண்டும்.

இதற்கிணங்க காலி வீதியில் மொரட்டுவை சிலுவை சந்தியிலிருந்து கட்டுபெத்த வரையும் வெள்ளவத்தை சவோய் திரையரங்கிலிருந்து பம்பலப்பிட்டி சந்தி வரை நாளையதினம் பஸ்களுக்கான முன்னுரிமை ஒழுங்கை நடைமுறைப்படுத்தப்படும்.

அதன் அடுத்த கட்டம் எதிர்வரும் 22ம் திகதியும் 29ம் திகதியும் அடுத்த மாதம் ஐந்தாம் திகதியும் 12 ஆம் திகதியும் நம்பவர் மாதம் 30 ஆம் திகதியும் நடைமுறைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *