1959 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு – லண்டன் பஸ் சேவை . 4 ஊழியர்கள் 10 பயணிகளுடன் குறித்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
குறித்த பயணம் 42 நாட்கள் 20,000 Km என உலகின் இரண்டாவது நீண்ட பயணம் என குறிப்பிடப்படுகிறது .
இந்த பஸ்ஸில் நித்திரை கொள்ள கட்டில் , பிரதேசங்களுக்கு ஏற்ப ஹீட்டர் , Ac போன்ற தேவையான கருவிகள் இருந்துள்ளது . பயணம் முழுவதும் பஸ்ஸில் உணவு தயாரித்து பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது .
இங்கிலாந்தில் உள்ள டோவர் துறைமுகத்தில் இருந்து இரவு படகு சேவை மூலம் பிரான்சில் உள்ள டன்கிர்க் வரும் குறித்த பஸ் , அங்கிருந்து பாரிஸ் – இத்தாலி – துருக்கி -ஈரான் – ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் – இந்தியா ராமேஸ்வரம் வரை தரை வழியாக வந்து , ராமேஸ்வரத்திலிருந்து கப்பல் ஒன்றின் மூலம் ஏற்றப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .
அன்று இந்த பயணத்திற்கு அரவிடப்பட்ட தொகை 78 பவுண்ட்ஸ்களாகும் .