• Sat. Oct 11th, 2025

புலமை பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி அதிகரித்தமைக்கான காரணம் தொடர்பில் பந்துல

Byadmin

Oct 9, 2017

கடந்த அரசாங்கத்தின் பாதீட்டில் நிறைவேற்றப்பட்ட விடயங்களை முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நடைமுறைப்படுத்தாததின் காரணமாகவே ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி அதிகரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டுக்காக 2014 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பாதீட்டு பிரேரணையில், புலமை பரிசில் பரீட்சையில் வெற்றிபெறும் மாணவர்களின் தொகை 10 ஆயிரத்தினால் அதிகரிக்க ஆலோசிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய வெற்றிபெரும் மாணவர் தொகையை 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கும், மாணவர்களுக்கான 500 ரூபாய் கொடுப்பனவை 1500 ரூபாவாக அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்காக 300 மில்லியன் ரூபாய் மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

எனவே, யோசனை முன்வைக்கப்பட்ட காரணத்திற்காக நிதி ஒதுக்கீடுகள் செய்ய முடியாது என்ற கருத்துடன், அரசாங்கத்தின் இந்த தவறில் இருத்து தப்பிச்செல்ல முடியாதென பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *