“எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தன்னுடைய கட்சியான ‘மக்கள் கட்சி’ தனித்துக் களமிறங்கும்” என்று, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், “எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தன்னுடைய கட்சி, எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிக்காது” என்றார்.
“தன்னுடைய கட்சியில் யாராவது இணைந்துகொள்ள விரும்புகின்றார்கள் என்றால், அவர்களுக்காக, கட்சியின் கதவு திறந்தே இருக்கிறது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.