ரணிலிடம் 90 நிமிடங்கள் விசாரணை
மத்திய வங்கியின் பிணைமுறிகள் சர்ச்சை தொடர்பில் விசாரணை செய்தல், புலனாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடுதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவில், இன்று (20) முன்னிலையான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், 90 நிமிடங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இன்று -20- முற்பகல் 10 மணியளவில், ஆணைக்குழுவில் முன்னிலையான பிரதமர், 11.30 மணியளவில் விசாரணைகள் நிறைவுற்று, அங்கிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பிரதமர் “நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் ஆணைக்குழுவிடம் தௌிவுப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஒன்று கிடைத்ததாக“ தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை வழங்கியமைக்காக ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
“இன்று தன்னால் பல விடயங்கள் தௌிப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் நாட்டின் பொருளாதாரம்,நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு உள்ளிட்ட பல விடயங்களை தௌிவுப்படுத்தியதாகவும்,தமது கட்சியின் தலைவர்,செயலாளரர் மற்றும் அமைச்சர்களும் எவ்வித பயமுமின்றி ஆணைக்குழுவில் முன்னிலையானதாகவும்“பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
“எது எவ்வாறு இருப்பினும் தாம் நல்லாட்சியை முன்னோக்கி கொண்டுசெல்லவுள்ளதாகவும்,இங்கு மறைப்பதற்கு ஒன்றுமில்லை“ எனவும் பிரதமர் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் சகிதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆஜராகியுள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறிகள் சர்ச்சை தொடர்பில் விசாரணை செய்தல், புலனாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடுதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் பிரதமர் ரணில் சாட்சியமளிக்கவுள்ளார்.