கண்டி ரயிலில் 569 இலட்சம் ரூபா பெறுமதியான திறந்த காசோலை கண்டெடுப்பு
கண்டி ரயில் நிலையத்தில் 569 இலட்சம் ரூபா பெறுமதியான திறந்த காசோலையொன்று ரயில்வே பாதுகாப்பு அதிகாரிக ளினால் நேற்று (26) கண்டெடுக் கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை கொழும்பில் இருந்து கண்டி நோக்கி வந்த கடுகதி
ரயிலில் பயணிகள் ஆசனமொன் றின் மீது கிடந்த காசோலையையே ரயில் நிலைய பாதுகாப்பு அதிகாரி கள் கண்டெடுத்துள்ளனர்.
ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளை யடுத்து குறித்த திறந்த காசோலை பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள
ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு சொந்த மானது என அடையாளம் கண்டுள் ளதாக ரயில்வே பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.