• Sat. Oct 11th, 2025

இலங்கை முஸ்லிம்களின், வாழ்வுரிமை பிரகடனம் – 2017

Byadmin

Nov 28, 2017

இலங்கை முஸ்லிம்களின், வாழ்வுரிமை பிரகடனம் – 2017

புதிய அரசியல் யாப்பு மாற்றத்தையோ, வடகிழக்கு இணைப்பையோ முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. – வாழ்வுரிமை மாநாட்டில் பிரகடனம்.

இலங்கை நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பே சிறந்தது. நாட்டிற்கு மீண்டுமொரு யாப்பு தேவையில்லை, தற்போது வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும், வடகிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும் முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்றைய தினம் 26.11.2017 ஞாயிற்றுக் கிழமை முஸ்லிம்களின் மாபெரும் வாழ்வுரிமை மாநாடு கொழும்பு, வைட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்த குறித்த மாநாட்டில் அமைப்பின் செயலாளர் A.G ஹிஷாம் MISc மக்கள் மனம் கவரும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அமைப்பின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் வாழ்வதற்கு உரிமை வேண்டும் என்ற தலைப்பில் தமிழ் மொழியிலும், அமைப்பின் பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் B.Com அவர்கள் சிங்கள மொழியிலும் சிறப்புரையாற்றினார்கள்.

ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. கபீர் DISc அவர்கள் மாநாட்டு பிரகடனத்தை வெளியிட்டு வைத்தார்.

குறித்த பிரகடனத்தில்

★ உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் திருத்த சட்ட மூலம் உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டும்.

★ 100% விகிதாசார முறைப்படியே உள்ளுராட்சி, மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

★ புதிய இடைக்கால அறிக்கையை இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

★ இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பு எதுவும் தேவையில்லை. தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பே போதுமானது.

★ வடகிழக்கு இணைப்பை இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

★ மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்குவதை ஒரு போதும் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதுடன் பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்குவது என்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

★ முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசியல் வாதிகளின் கருத்துக்களை மாத்திரம் நம்பியிராது, உண்மையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்னவென்பதை ஜனாதிபதியவர்கள் ஆராய்ந்து பார்க வேண்டும். குறிப்பாக ஜமாதிபதியவர்களை சந்திப்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பல முறை கடிதம் மூலம் அனுமதி கேட்டும் இதுவரை எவ்வித அனுமதியும் தரப்படவில்லை. ஜனாதிபதியவர்கள் தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுடன் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் தவ்ஹீத் ஜமாஅத்துடன் சந்திப்புக்கு நேரம் தர வேண்டும் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டது.

★ முஸ்லிம்களின் உரிமைகளை பரிக்கும் விதமாக கொண்டுவரப்படும் இதுபோன்ற தீர்மானங்களுக்கு எதிராகவே இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் செயல்பட வேண்டும் போன்ற பல பிரகடனங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரஸான் DISc அவர்களின் நன்றியுரையுடன் மாநாடு சிறப்பாக முடிவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *