தேர்தல் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்தும்
தேர்தல் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவை முன்னிறுத்தி ஜி.எல். பீரிஸ் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இதுவரை மூன்று மாவட்டங்களுக்கான கட்டுப்பணத்தினை செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.