சுதந்திரக் கட்சிக்கும் மஹிந்த அணிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் மஹிந்த அணிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவதில் இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இரண்டு தரப்பின் சார்பிலும் மூவரடங்கிய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்களுக்கு இடையிலான இன்று சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது முக்கிய தீர்மானத்தை எட்டுவது குறித்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படடுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை மஹிந்த அணி முன்வைத்துள்ளது.
இந்தக் கோரிக்கை தொடர்பில் இன்றை சந்திப்பின் போது ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.