(ஈராக்கில் அலைந்த மனித மிருகங்கள்..! – “நான் ஈராக்கியர்களை மனிதர்களாகவே கருதவில்லை” – 14 வயது பெண் குழந்தையை கற்பழித்து கொலை செய்த அமெரிக்க சிப்பாய்)
வூல்விச்சில் கொல்லப்பட்ட பிரித்தானிய சிப்பாய் பற்றி பிரித்தானிய மதகுரு ஒருவர் சொன்னார் “இஸ்லாமியர்கள் கொலை வெறியர்கள். இவ்வளவு மிருகத்தனமாக எல்லோர் முன்பும் துடி துடிக்க ஒருவரை கொல்வது ஏற்று கொள்ள முடியாத கொடூரம். முஸ்லிம்களை இங்கிலாந்தை விட்டு விரட்டியடிக்க வேண்டும்”. (dailymail.co.uk) .
சரி அவர் பார்வையிலேயே பார்ப்போம். 14 வயது பெண் குழந்தையை கதற கதற கற்பழித்து, அதுவும் அவள் தாய் தந்தையரின் கண்முன்னே. பின்னர் அவளை சுட்டு கொன்று விட்டு “நான் ஈராக்கியர்களை மனிதர்களாகவே கருதவில்லை” என கொக்கரித்து அவளது குடும்பத்தினரையும் படுகொலை செய்த அமெரிக்க சிப்பாய் பற்றி இந்த மதகுரு என்ன சொல்லப் போகிறார்?
வெள்ளை தேசத்தில் பிறந்த வெள்ளையர்கள் முஸ்லிம் தேசங்களில் செய்யும் கொலைகளிற்கு இது ஒரு சாம்பிள் வார்த்தைகள் மட்டுமே!! (இது பற்றி கடந்த வருடம் நாம் ஏற்கனவே ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளோம்)
ஒரு பாலியல் பலாத்காரம், பின்னர் படுகொலை, அந்த பெண் குழந்தையின் தாய் தந்தை சகோதரி என மொத்தம் 04 கொலைகள். இதனை செய்து விட்டு அவர் சொல்கிறார். “நான் ஈராக்கியர்களை மனிதர்களாகவே நினைப்பதில்லை”. அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பிற்காக பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் கடுமையாக உழைத்த ஒரு தேசிய வீரனது வார்த்தைகள் இவை.
Abeer Qassim al-Janabi, Green’s 14-year-old victim, whose parents and sister were also murdered in the attack. Green said deaths of two of his colleagues had ‘messed him up real bad’
Steven Green. 101st Airborne பிரிவின் சோல்ஜர். சமஷ்டி Tucson, Arizona சிறைச்சாலையில் இருந்து அவர் வழங்கிய தொலைபேசியூடான பேட்டியிலேயே மேற்படி கருத்துக்களை கூறியுள்ளார். 12 மார்ச் 2006ல் மஹ்மூதியா என்ற ஈராக்கிய நகரில் தான் அவர் இந்த படுபாதகத்தை நிகழ்த்தியுள்ளார். 2009 ல் நிகழ்த்தப்பட்ட ட்ரயல் விசாரணையில் அவர் சொன்னார் “ஈராக்கில் நான் செய்த கொலைகளிற்கும் கற்பழிப்பிற்கும் நான் அனுதாபம் தேடவில்லை. மன்னிப்பும் கோரவில்லை. ஏனென்றால் நாங்கள் எல்லோரும் இதைத்தான் செய்தோம் ஈராக்கில்”
அவரது நடவடிக்கைகளிற்கு ‘personality disorder’ காரணம் என கூறிய நீதிபதி 5 ஆயுட்கால் சிறைத்தண்டனையை அவரிற்கு விதித்தார். இவருடன் துணையாக செயற்பட்ட மீதி நால்வரில் மூவரிற்கு இராணுவ சிறையில் இருக்குமாறு தண்டனையளித்தார்.
தனது செயற்பாட்டிற்கு மேலதிக விளக்கம் தந்த கிறீன், “உங்களிற்கு ஒரு தொழில் கிடைத்து விட்டால் அந்த தொழில் ஊடாக உங்களிற்கு தேவையான, நீங்கள் கனவு கண்ட, நீங்கள் ஆசைப்பட்ட அனைத்தையும் செய்ய முயல்வீர்கள். அது போலவே எனக்கு இந்த இராணுவ பணி ஈராக்கில் கிடைத்தமை” என கூறியுள்ளார். எப்படியிருக்கிறது அமெரிக்க வீரரின் நியாயங்கள்.
101 எயார் போர்ன் முகாமில் தான் இருக்கும் போது ஏனைய சக வீரர்கள், தங்களிற்கு முன்னரே ஈராக்கில் பணி புரிந்த மூத்த வீரர்கள் போன்றவர்கள் பரஸ்பரம் பேசிய வார்த்தைகளே தன்னை ஈராக்கியர்கள் பற்றிய பல முடிவுகளை நோக்கி கொண்டு சென்றதாக கூற ஸ்டீவன் கிறீன் தவறவில்லை.
“ஈராக்கியர்கள் கொலைகாரர்கள், வெறியர்கள், ஈவுஇரக்கமற்றவர்கள், துரோகிகள், போன்ற பயங்கரமான கற்பிதங்கள் தன் மனதில் விதைக்கப்பட்டதாகவும், அதன் தொடராய் நடந்த சர்தர்ப்ப நிகழ்வே இந்த சம்பவம்” எனவும் அவர் கூறியுள்ளார்.
ஈராக்கிய தாக்குதல் நிகழ்வுகளிற்கு பின்னர் ஏற்படும் மனோ நிலைகள் பற்றியும் அவர் விவரித்துள்ளார். சக வீரர் காயப்படும் போதோ அல்லது கொல்லப்படும் போதோ தனக்கு கொலை வெறி ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
Neighbour Hussein Mohammed points to the charred and blood-splattered crime scene where the killings took place in Mahmoudiya, Iraq
தனது மனோ நிலை குறித்து இராணுவ மனோதத்துவ வைத்தியரிடம் ஆலோசனை கேட்ட போது நீண்ட விடுப்பில் தாயகம் திரும்பி குடுப்பத்துடன் உற்சாகமாக இருக்குமாறு கூறியுள்ளார் வைத்தியர். விடுப்பு கிடைக்காததன் காரணமாக அவரது கொலை வெறி அதிகரித்ததாகவும் கூறியுள்ளார். 14 வயது பெண் மேல் ஏற்பட்ட காமவெறி என்பதனை விடவும் ஈராக்கிய பெண்ணை கற்பழிக்க வேண்டும் என்ற வெறியே மேலோங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறையில் கிறிஸ்தவ கன்னியாஸ்திரியை சந்தித்து உரையாடியதன் ஊடாக தன்னை இப்போது பைபிள் மனிதனாக அறிமுகம் செய்கிறார் ஸ்டீவன் கிறீன். “நான் செய்த பாவங்களிற்கு நான் உயிர் வாழ தகுதியில்லாத மனிதன்” என இப்போது கூறுகிறார்.
சரி இது அன்றாடம் ஈராக்கில் நடந்த சம்பவங்களின் ஒரு துளி மட்டுமே..
முஸ்லிம் தேசங்களின் மீது ஆக்கிரமிப்பு செய்யும் அமெரிக்கா மனநோயாளிகளை இராணுவம் என்ற பெயரில் அனுப்புகிறதா, அல்லது அவர்கள் அங்கே செய்யும் அநியாயங்களினால் மனநோயாளிகளகா மாறுகிறார்களா என்பதே கேள்வி.
ஸ்டீவன் கிறீனின் வாதங்களால் அவன் செய்த அநியாயங்களிற்கு நியாயம் கற்பிக்கவே முடியாது. முஸ்லிம் வெறி, இஸ்லாமிய வெறி என மனித மிருகங்களின் கூட்டாக காட்சியளிக்கும் அமெரிக்க இராணுவம் மிக பயங்கரமானது என்பது மட்டும் தெளிவான உண்மையாக எழுந்து நிற்கிறது.