(மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்திற்கும் அமைச்சரிற்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை)
சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் துறைசார் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் இடையில் இன்று(10) கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
நீண்ட கால மின் பிறப்பாக்க திட்டம் தொடர்பில் அமைச்சின் தலையீடு குறித்து இன்று தௌிவுப்படுத்தப்படவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, நீண்டகால மின்னுற்பத்தி திட்டத்துக்கு நேற்று(09) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கபெற்றுள்ளதாக, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.