• Sat. Oct 11th, 2025

‘ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்’ – அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

Byadmin

Jun 5, 2018

(‘ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்’ – அமைச்சர் அகில விராஜ் காரியவசம்)

ஐ.தே.க வின் தலைவரையே 2020 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களமிறக்குவோம் என தெரிவித்த அக்கட்சியின் செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் கோட்டாபயவை சவாலாக கருதவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.க ஊடக மையத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் அக்கட்சியின் தலைமையமான சிறிகொத்தவில் நேற்று (04) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் “ஐக்கிய தேசிய கட்சி திருடர்களை பாதுகாப்பதாக கூறப்படுகின்றது. ஆனால், எமக்கு அவ்வாறான அவசியம் கிடையாது. அதற்காக, திருடர்கள் என்று நிருபிக்கப்படாதவர்களை திருடர்கள் என்று முத்திரை குத்துவதற்கும் நாம் தயாரில்லை.

ஐ.தே.கவின் தலைவரையே 2020 இல் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் போது எதிரணி வேட்பாளராக களமிறங்க போவதாக கூறப்படும் கோட்டாபய ராஜபக்சவை நாம் சவால் என்ற கருதவில்லை.

2015ஆம் ஆண்டில் பொதுவேட்பாளருக்கு எதிராக களமிறங்கிய வேட்பாளரையும் நாம் சவாலாக கருதவில்லை என்று கூறினோம் அதன்படி தேர்தலிலும் வெற்றிபெற்றோம்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *