• Sat. Oct 11th, 2025

Month: September 2017

  • Home
  • இன்று அவசரமாக கூடுகிறது நாடாளுமன்றம்; மற்றுமொரு திருத்தச் சட்டங்களை  நிறைவேற்ற தீர்மானம்

இன்று அவசரமாக கூடுகிறது நாடாளுமன்றம்; மற்றுமொரு திருத்தச் சட்டங்களை  நிறைவேற்ற தீர்மானம்

நாடாளுமன்றத்தின் அவசர அமர்வு ஒன்று இன்று (26.09.2017) இடம்பெறவுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் கட்டளை திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றும் நோக்கில் இந்த அமர்வு பிற்பகல் ஒரு மணி முதல் இரவு 7.30 மணி வரை இடம்பெறவுள்ளது. இதன்போது, பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும்…

ரோஹிங்ய முஸ்லிம்கள் தொடர்பில் இவ்வரசின் கொள்கை தான் என்னவோ?

ஒரு விடயத்தில் இவ்வரசின் ஆட்சியாளர்கள் ஆளுக்கொரு கொள்கையை கடைப்பிடிப்பதை ரோஹிங்ய முஸ்லிம்கள்விடயத்திலும் காட்டியுள்ளதாக பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. இலங்கையில் பல கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து கூட்டாட்சி செய்வதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் இலங்கையில் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள கட்சிகளிடையே ஒரு விடயத்தில் ஒரு கொள்கைகடைப்பிடிக்கப்படுவதாக காணக்கிடைக்கவில்லை. ஒரு விடயத்தில் ஒரு கொள்கையை கடைப்பிடிக்க முடியாமல்போனால் கூட்டாட்சி என்ற ஒன்று அமையப்பெற்றதில் எந்த இலாபமுமில்லை. அது கூட்டாட்சியினுடைய பண்புமில்லை. ரோஹிங்ய முஸ்லிம்கள் மீதான விசா தடை, கண்டனம் தெரிவிக்காமை போன்ற விடயங்கள் இலங்கை முஸ்லிம்கள்மத்தியில் மிகவும் அதிருப்தியை தோற்றுவித்திருந்தது. அண்மையில் பாராளுமன்றத்தில் வைத்து உரையாற்றியவெளிவிவகார அமைச்சர் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை கண்டித்ததோடு அவர்களுக்குஉதவி செய்யவும் தயார் என்ற அறிவிப்பை விடுத்திருந்தார். இவரின் அறிவிப்பின் பின்னணியில் சில காரணங்கள் இருப்பதாக யூகிக்க முடிகின்ற போதும் அது முஸ்லிம்களுக்குமகிழ்வை அளித்திருந்தது. இவரது இந்த அறிவிப்பானது வார்த்தை ரீதியான மகிழ்வை கொடுத்திருந்தாலும் செயல்ரீதியான மகிழ்வை கொடுத்திருக்கவில்லை. இந்த அறிவிப்பு வந்த மறு நாள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ரோஹிங்யமக்களை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை போன்ற கடுந் தொனியிலான கருத்தை வெளியிட்டிருந்தார். வெளிவிவகார அமைச்சர் உதவ போகிறார், பிரதமர் கண்டிக்கின்றார் என்றால்  ரோஹிங்ய மக்கள் விடயத்தில்இவ்வரசின் கொள்கை தான் என்ன? இனவாதத்தையும் இனவாதிகளையும்  அடிப்படையாக கொண்டு ஆட்சி செய்யும்இவ்வரசால் ஒரு போதும் ரோஹிங்ய மக்களுக்கு உதவ முடியாது. ரோஹிங்ய மக்களுக்கு சார்பான நிலைப்பாட்டைஇலங்கை அரசு எடுத்தாலும் சரி எடுக்காவிட்டாலும் சரி முதலில் ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். ஆளுக்கொரு நிலைப்பாட்ட வெளிப்படுத்துவதன் மூலம் ஆளுக்கொருவரை இலங்கை ஆட்சியாளர்கள் யாரை திருப்திசெய்ய முனைக்கின்றார்களோ தெரியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதிக்கும் 6 நாடுகள்

காலையில் சூரியன் உதிக்கும் மாலையில் மறைந்திடும். சூரியனைச் சுற்றியே எல்லா உயிர்களும் தங்களின் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டிருக்கின்றன,அறிவியல் கோட்பாடுகளின் படி இப்படி நடப்பது தான் வழக்கம். ஆனால் உலகின் சில நாடுகளில் சூரியன் மறையாமல் 24 நான்கு மணி நேரமும் வெளிச்சத்தை…

இன்று முதல் கேஸ் விலை அதிகரிக்கிறது

12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை  அதிகரிக்கப்பிற்கு  நுகர்வோர் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கு அமைவாக இன்று (25) நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில், 110 ரூபாயால் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக அதிகமான எடை கொண்ட எகிப்து பெண் அபுதாபியில் மரணம்

எகிப்து நாட்டை சேர்ந்த எம்மா என்ற 37 வயது பெண் சுமார் 500 கிலோ உடல் எடையுடன் உலகின் மிகவும் அதிகமான எடை கொண்ட பெண்ணாக ஊடகங்களின் கவனத்தை கவர்ந்தார். உடல் எடை குறைப்புக்காக இந்தியாவின் மும்பை நகரில் அவருக்கு சிறப்பு…

புதிய அரசியலமைப்பின் மூலம் ஈழத்தை உருவாக்க முயற்சி… விட மாட்டோம்

புதிய அர­சியல் அமைப்பின் மூல­மாக மத்­திய அர­சாங்­கத்தை பல­வீ­னப்­ப­டுத்தி தமிழ் பிரி­வி­னை­வா­தி­களின் தேவையை நிறை­வேற்ற முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. தமி­ழீ­ழத்தை உரு­வாக்கும் அடித்­த­ளத்தை ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் இட்­டுள்­ள­துடன் சர்­வ­தேசத்திற்கான வாக்­கு­று­திகள் மெது­வாக நிறை­வேற்றப்பட்டு வரு­கின்­றன என்று தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பொது…

முன்னாள் DIG லலித் ஜயசிங்க கைது…

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று(25)  காவல்துறை விசாரணை பிரிவில் வாக்குமூலம் அளிக்க முன்னிலையான நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, வித்தியா படுகொலை தொடர்பில் பிரதான சந்தேக நபருக்கு பாதுகாப்பு…

இலங்கை வந்தடைந்தார் ஜனாதிபதி…

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(25) காலை இலங்கை வந்தடைந்தார். இவ் விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 72 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் உரையாற்றியதுடன் பல…

தர்காநகரில் இரு குழுக்கள் மோதல், ஒருவரின் நிலை கவலைக்கிடம்!

அளுத்கம, தர்காநகர் வெலிபிடியவில் இரு குழுக்களுக்கிடையில் நேற்றிரவு(24) இடம்பெற்ற மோதலில் வெட்டுக் குத்துக் காயங்களுக்கு இலக்காகிய இருவர் களுத்தறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரச்சினைக்கு காரணமானவரின் வீடும் தாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசத்துக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்…

போன் அழைப்புகளை அலட்சியம் செய்த மகன்; ஆப் மூலம் தீர்வு கண்ட தந்தை

தனது அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் மகன் அலட்சியம் செய்தபோது மிகவும் வேதனைப்பட்ட பிரிட்டனை சேர்ந்த நிக் ஹெர்பெர்ட் இதற்கொரு தீர்வை காண எண்ணினார். ஆக்கப்பூர்வமாக செயல்பட முடிவு செய்த அவர், மகனை பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் ஒன்றை கண்டுபிடித்தார்.…