அமைச்சர் ஹக்கீம் அவர்களின் தாயார் வபாத்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தாயார் ஹாஜரா உம்மா, கடும் நோய்வாய்ப்பட்ட நிலையில் இன்று (22.09.2017) காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போம்.
மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல்
பாதுக்க மீப்பை மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் மீது நேற்று அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாதவர்கள் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். தாக்குதலில் பள்ளிவாசலின் ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியுள்ளது கொழும்பு அவிஸ்ஸாவலை பிரதான வீதியில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் பள்ளிவாசல்…
கலப்புத் தேர்தல் முறையும் ஏமாற்றப்பட்ட முஸ்லிம்களும் – பாகம்-1
வை எல் எஸ் ஹமீட் தற்போது சட்டமாக்கப்பட்டுள்ள கலப்பு முறைத்தேர்தல் என்றால் என்ன? அது முஸ்லிம்களுக்கு சாதகமானதா? பாதகமானதா? 60:40 இற்கு எதிராக போராடி 50: 50 ஆக ஆக்கி விட்டதாக ஏதேதோ சொல்கிறார்களே! இந்த 60:40, 50:50 என்பது என்ன?…
இலங்கை முஸ்லிம்களை சிறுபான்மையிலும் சிறுபான்மைகளாக ஆக்கிவிட்டனர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை காட்டி முஸ்லிம் சமூகத்தை படுகுழியில் தள்ளும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சமூக ஆர்வளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம் தரப்பு பாரிய பங்காற்றிய போதும் முஸ்லிம்களை இந்த அரசாங்கம் இரு பொருட்டாகவே கருதவில்லை என்பதற்கு…
ரோஹிங்கியாவில் முஸ்லிம்களுக்கு உதவி செய்ய வந்தவர்கள் மீது தாக்குதல்
ரோஹிங்யா முஸ்லிம்களுக்கான தேவையான உதவிகளைசெய்ய அந்நாட்டு அரசு பெயரளவில் சில நடவடிக்கைகளைஎடுத்து வரும் நிலையில் புத்த மதத்தினர் ஒன்று திரண்டுநிவாரண பொருட்கள் வழங்கக்கூடாது என போராட்டத்தில்ஈடுபட்டனர். மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம்கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் 25-ந் தேதி போலீஸ் மீதுதாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்குள்ள அந்தஇனத்தவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்கு தீவைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 4லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம்புகுந்துள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வந்த மியான்மர்நாட்டின் நடைமுறைத்தலைவர் சூ கி தன் மீதான சர்வதேசவிமர்சனங்களுக்கு பதில் அளிக்கிற வகையில் கடந்தசெவ்வாய்க்கிழமை டெலிவிஷனில் உரையாற்றினார். அப்போது அவர் ராக்கின் மாகாணத்தில் இயல்பு நிலைதிரும்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அங்குஉள்ள ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு மனித நேய உதவிகள்வழங்கப்பட்டு வருவதாகவும், தெரிவித்தார். அதன்படி ராக்கின் மாகாணத்தில் உள்ள ரோஹிங்யாமுஸ்லிம்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசுநடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்கள் ஒருபடகில் நிவாரண பொருட்களுடன் ராக்கின் மாகாணத்தின்தலைநகர் சிட்வே வந்தனர். அப்போது அங்கு புத்த மதத்தினர்நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு, ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கக்கூடாது எனகூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைகளில் இரும்புகம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததால் அங்குபெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து அங்கு போலீசார்குவிக்கப்பட்டனர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் நிவாரணபொருட்கள் கொண்டு வந்த படகின் மீது பெட்ரோல்குண்டுகளை வீசினர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும்மோதல் வெடித்தது. இதையடுத்து, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால்சுட்டு போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். மோதலில்ஈடுபட்ட சிலரை போலீசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர். முன்னதாக நேற்று செஞ்சிலுவை சங்கத்தினர் உதவிக்காக சென்ற படகு பங்களாதேஷ் பகுதியில் விபத்துக்குள்ளாகி 9 அதிகாரிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருட நடுப்பகுதியில் மாகாண சபைத் தேர்தல்
புதிய தேர்தல் முறைமையின் கீழ் அடுத்த வருடம் மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான எல்லை நிர்ணயக் குழு எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதியினால்…
ஒரே ஒரு பயணமும்! சீரழியும் குடும்பங்களும்!
குடும்பம் என்பது ஒரு வலுவான சமூகக் கட்டமைப்பின் அங்கமாகும், இந்நிலையில் ஒரு சமூகத்தினுடைய பாரிய அடித்தளமே ஒரு குடும்பத்தின் கட்டமைப்பு, பண்புகள் மற்றும் வளர்ச்சியில்தான் தங்கியுள்ளது. இன்றைய இயந்திர உலகத்தில் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு அந்த குடும்பத்தினர் எந்தளவில் பங்களிப்புச் செய்கின்றனர்…
சமூகவலைத்தள பாவனையால் தலாக்-பஸ்ஹூ சொல்லும் இன்றைய சமூகம்
உலகம் முழுவுதும் தொடர்பாடல் சாதனங்களை பின்தள்ளிவிட்டு சமூக வலைத்தளங்கள் முன்னோக்கி செல்வதை காணக்கூடியதாய் உள்ளது, இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒரு காரணம். இன்று பேஸ்புக் முதல்கொண்டு வாட்ஸ்அப் வைபர் ஐ.எம்.ஓ போன்ற அப்ளிகேசன்கள் குரல் மற்றும் வீடியோ வழி சாட்டிங்கு உதவுகின்றன.…
ரோஹிங்யா அகதிகளுக்கு 15 மில்லியன் டொலர் உதவி – மன்னர் சல்மான் உத்தரவு
மியன்மாரில் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துவரும் ரோஹிங்யா அகதிகளுக்கு 15 மில்லியன் டொலர் உதவி வழங்குமாறு சவுதி அரேபிய மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். குறித்த அறிவிப்பு தொடர்பில் சவுதி அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து சவுதி பிரஸ் ஏஜென்சிக்கு (SPA) வந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள்..
பத்தரமுல்ல – தலஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக, மாலபே – பத்தரமுல்ல வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று(21) காலை பேரூந்து ஒன்றும், பாரவூர்தி ஒன்றும் மோதுண்டதினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ள நிலையில்…