உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 75 % தொகுதிகளை நாம் கைப்பற்றுவோம்
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாடுபூராகவும் உள்ள தேர்தல்தொகுதிகளில் 75 சதவீதமான தொகுதிகளை ஐக்கியதேசிய முன்னணி கைப்பற்றும் என்பதனை தமது கட்சிகணக்கிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார். அத்துடன் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான இறுதிதீர்மானம் எடுப்பதற்கு பிரதமர் தலைமையில் வேட்பு மனு குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் கபீர் ஹாஷிம் மேலும் குறிப்பிடுகையில், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தற்போது நாம் தயாராகிவருகின்றோம். இதன்படி மாவட்ட அடிப்படையில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு மாவட்டங்கள் வாயிலாக சிறிகொத்தா வேட்பாளர் தெரிவுக்குழு பயணித்த வண்ணம் உள்ளது.இந்த வாரம் அநுராதபுரம், பொலனறுவை மாவட்டங்களுக்கு தெரிவுக்குழு பயணிக்கவுள்ளது.அதேபோன்றுஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் பயணித்து வேட்பாளர்களை தெரிவு செய்ய திட்டமிட்டுள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் தெரிவில் கிராமத்தில்உள்ள பிரபலங்களை களமிறக்க திட்டமிட்டுள்ளோம்.இதன்படி சிறிகொத்தா தெரிவுக் குழுவினால்தயார் செய்யும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கானஇறுதி தீர்மானம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கும் குழுவினால் எடுக்கப்படும். விரைவில்குறித்த குழு நியமனம் செய்யப்படும். இந்நிலையில் தற்போது கட்சியினால் கணக்கீடு ஒன்றுசெய்யப்பட்டுள்ளது. இந்த கணக்கின்படி நாடுபூராகவும்உள்ள தேர்தல் தொகுதிகளில் 75 சதவீதமான தொகுதிகளைஐக்கிய தேசிய முன்னணி கைப்பற்றும். அத்துடன் தற்போதுஇந்த ஆட்சியின் மீது ஐக்கிய தேசியக் கட்சியினரே நம்பிக்கை இழந்தது போல் செயற்படுகின்றனர். இரு வருடங்களில் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்று அஞ்சுகின்றனர். எனினும் நான் ஒன்றை கூற விரும்புகின்றேன். நாம் இருவருடங்களுக்கு ஆட்சி செய்ய வரவில்லை. இம்முறை அதுநடக்காது. 2020 ஆம் ஆண்டு ஆட்சி முடித்துக்கொண்டுவிடாமல் 2025 வரையும் ஆட்சியை கொண்டு செல்வோம். அதுமட்டுமல்லாமல் 2025 ஆம் ஆண்டுக்கு அப்பாலும் ஐக்கியதேசியக் கட்சியின் ஆட்சியை கொண்டு செல்வோம்.
வடக்கு, கிழக்கு இணைப்புக்கு அ.இ.மக்கள் காங்கிரஸ் எதிர்ப்பு
தமிழ் தரப்புக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கோருவது அவர்களின் விருப்பம் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இவ்விரு மாகாணங்களும் இணைவதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்குமெனவும் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற (௦4) முஸ்லிம் புத்திஜீவிகளுடனான விஷேட…
தன் உயிரைக் கொடுத்து பயணிகளைக் காத்த இலங்கை பஸ் சாரதி!
அப்புத்தளையில் பயணிகள் பஸ் விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்கக்ப்பட்டடுள்ளனர். ஆனால் இந்த பஸ்ஸின் சாரதி உயிரிழந்தார். இதுகுறித்து சம்பவ இடத்திச் சென்ற ஊடகவியலாளர் புஸ்பராஜ் மகேஸ், தகவல் தந்தார். ”அப்புத்தளையில் இருந்து கொஸ்கம நோக்கி பஸ்…
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மைதானத்தில் தற்கொலை முயற்சி
அணியில் தெரிவு செய்ய மறுத்ததாலும், லஞ்சம் கேட்டதாலும் மனமுடைந்த இளம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மைதானத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குலாம் ஹைதர் அப்பாஸ் என்ற வலது கை வேகப் பந்து வீச்சாளர் லாகூர் நகர கிரிக்கெட் சபை…
கலப்புத் தேர்தல் முறையும் ஏமாற்றப்பட்ட முஸ்லிம்களும் – பாகம் 5
இரட்டை வாக்கு இன்றைய பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வாகும்? ————————————————- விடயத்திற்குள் செல்லமுன் சில ஆரம்பக் குறிப்புகளைப் பதிவிட விரும்புகிறேன் குறிப்பு:1 வெட்டுப்புள்ளி: பாராளுமன்றத் தேர்தலில் இருக்கின்ற 5 விகித வெட்டுப்புள்ளியை மாகாணசபைத் தேர்தலிலும் இருப்பதாக எண்ணி இன்னும் சிலர் குழம்புவது புரிகின்றது.…
சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மிமன தயாரத்ன தேரர் கைது
சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மிமன தயாரத்ன தேரர் மற்றும் அரம்பேபொல ரத்னசார தேரர் ஆகியோர் இன்று(02) கொழும்பு குற்றதடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை பிரதேசத்தில் மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில் வாக்கு…
மினுவங்கெட்ட மற்றும் மீப்பே ஆகிய இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்
நாட்டில் இருவேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களுக்குள் இரு பள்ளிவாசல்கள் மீது பெற்றோல் குண்டு மற்றும் கல்விச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. வாரியபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மினுவங்கெட்ட மற்றும் மீப்பே பொலிஸ் பிரிவுகளில் உள்ள பள்ளிவாசல்கள் மீதே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.…
இன்று திருகோணமலையில் அமெரிக்க – இலங்கை கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி ஆரம்பம்…!
அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான ஐந்து நாள் கூட்டுப் பயிற்சி இன்று திருகோணமலைத் துறைமுகத்தில் ஆரம்பமாகவுள்ளது. கரட்-2017 எனப்படும் ‘கப்பல் தயார் நிலை மற்றும் பயிற்சி ஒத்துழைப்பு-2017′ (‘Cooperation Afloat Readiness and Training’ aka ‘CARAT 2017’) என்ற இந்தக்…
கல்முனை மஸ்ஜிதுல் ஸாஹிரா; தொழுகைக்காக மீண்டும் திறப்பு
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஸாஹிரா பள்ளிவாசல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மீண்டும் தொழுகைக்காக பள்ளிவாசலை திறக்கும் நிகழ்வொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (26) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கல்முனை சாஹிராவைப் பொறுப்பேற்று, கல்லூரியின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டுவரும் கல்லூரி அதிபர் எம்.எஸ்.முஹம்மட்…
ஞானசாரருக்கு எதிரான எந்த வழக்கும், வாபஸ் பெறப்படவில்லை – சிராஸ் நூர்தீன்
ஞானசார தேரரை, சகல வழக்குகளில் இருந்தும் விடுவிப்பதற்குச் சட்டத்தில் இடமில்லை என, திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லியனகே தெரிவித்தார். இஸ்லாம் மதத்தையும் அல்லாஹ்வையும் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு வந்த ஞானசார தேரருக்கு எதிராகப்…