• Sat. Apr 4th, 2026

Month: January 2018

  • Home
  • முடியும் என்றால் எனது ஆட்சி காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகளை நிரூபித்து காட்டவும்

முடியும் என்றால் எனது ஆட்சி காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகளை நிரூபித்து காட்டவும்

(முடியும் என்றால் எனது ஆட்சி காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகளை நிரூபித்து காட்டவும்) எந்தவொரு விசாரணைக்கும் தான் முகம் கொடுத்த தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி…

வடகொரியா தலைவருடன் நேரடியாக பேசத்தயார் – டிரம்ப் அறிவிப்பு

(வடகொரியா தலைவருடன் நேரடியாக பேசத்தயார் – டிரம்ப் அறிவிப்பு) வடகொரியா தொடர்ந்து அணுக்குண்டுகளை வெடித்தும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆற்றல் கொண்ட ஏவுகணைகளை சோதித்தும் வருவது அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்…

“2030 வரை ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சியில் இருக்கும்” அகில விராஜ்

(2030 வரை ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சியில் இருக்கும் …) 2030 வரை ஐக்கிய தேசிய கட்சியே நாட்டை ஆட்சி செய்யும் என கல்விஅமைச்சர் அகில விராஜ்காரியவசம் குறிப்பிட்டார். இன்று ஐக்கிய தேசிய கட்சியின் மாநாடு கெம்பல் மைதானத்தில்இடம்பெற்றது.இந்த நிகழ்வில் உரையாற்றிய கல்வி அமைச்சர் இதனைகுறிப்பிட்டார். மேலும் கருத்து வெளியிட்ட அவர்.. பிரதமர் மீது வீண் பழி சுமத்தி அவரை பதவியில் இருந்து விரட்ட சிலர் கனவுகான்கிறார்.அது ஒருபோதும் நடக்காது.நாம் கூட்டு எதிரணிக்கு கூறவிரும்புகிறோம் “நாம் 2030 வரை ஆட்சியில் இருப்போம் நீங்கள் திருடியபணத்தை பத்திரப்படுத்து வைத்துக்கொள்ளுங்கள்” என அவர் குறிப்பிட்டார்.

இனவாதிகளின் முழுமையான கூடாரமாக மாறிவிட்ட ஐக்கிய தேசிய கட்சி

(இனவாதிகளின் முழுமையான கூடாரமாக மாறிவிட்ட ஐக்கிய தேசிய கட்சி) இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஜிஹாத் எனும் நூலை வெளியிட்டு, இனவாதத்தை விதைத்ததில்   முதன்மையானவரான சம்பிக்க ரணவக்க  தலைமையில் ஐக்கிய தேசியகட்சியின் மத்திய குழு கூட்டம் நடந்திருப்பதானது, ஐக்கிய தேசியகட்சியானது இனவாதிகளின் முழுமையான பிடிக்குள் சென்றுள்ளதைஎடுத்துக் காட்டுகிறது. இன்று ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு கூட்டமானது, அமைச்சர்சம்பிக்க ரணவக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்த அமைச்சர்சம்பிக்க ரணவக்க தான் இனவாதிகளின் தந்தை. இன்று, அதிகமாகதுள்ளிக்கொண்டிருக்கும் ஞானசார தேரரின் உள்ளங்களில் இனவாதசிந்தனைகள் பெருக்கெடுக்க, இவர் அந் நேரத்தில் வெளியிட்டு வந்தகருத்துக்களும் காரணமாக அமைந்திருக்கலாம். ஞானசார தேரர் மற்றும்அமைச்சர்  சம்பிக்க ரணவக்க ஆகியோர் ஒரு காலத்தில் ஒன்றாக பயணம்செய்தவர்கள். அதனை, அவர் தனது வாயாலேயே ஏற்றுக்கொண்டுமுள்ளார். இன்றும், இவர் தான், ஞானசார தேரரை இயக்குகுறாரா என்ற பலத்தசந்தேகம் உள்ளது. அளுத்கமை கலவரத்தை தொடர்ந்து, முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஞானசார தேரரை கைது செய்ய தயாரானபோது, அதனை இவரே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ பகிரங்க குற்றச் சாட்டுக்களை முன் வைத்துமுள்ளார். இப்படியானஒருவர் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை நடாத்தும் அளவு, அக் கட்சியினுள் பலமிக்கவராக திகழ்கிறார். இதில் கவலையான விடயம் என்னவென்றால், ஐக்கிய தேசிய கட்சியானதுஇனவாதிகளின் முழுமையான பிடிக்குள் சென்றுள்ள போதும், எமது முஸ்லிம்மக்கள், அதிகம் ஐக்கிய தேசிய கட்சியையே ஆதரிக்கின்றனர். இன்னும், முஸ்லிம் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிப்பார்களாக இருந்தால், முஸ்லிம்கள் மிகக் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும்என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம்கள் ஐக்கியதேசிய கட்சியை ஆதரிப்பதானது , தங்களது தலைகளை தாங்களேபொறிக்குள் வைத்துள் கொள்வது போன்றாகும். அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஜனாதிபதியாகும் ஆசையில் இனவாதத்தைமிகவும் நிதானமாக கையாண்டு வருகிறார். இருந்தாலும், இடைக்கிடையேஏதேனும் சொல்லிக்கொண்டே இருப்பார். இன்று, அவர் பெரும் இனவாதியாகதோன்றாமல் இருக்கலாம். அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசியகட்சியின் மத்திய குழு கூட்டத்தை நடாத்தியுள்ளார் என்பதற்கும் ஞானசாரதேரர் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு கூட்டத்தை நடத்தியுள்ளார்என்பதற்கும் இடையில் எந்த வேறுபாடுமில்லை. எதிர்வரும் தேர்தலில் கட்சிசிந்தனைகளை மறந்து முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்து ஐக்கிய தேசியகட்சியை எதிர்த்து பாடம் புகட்ட வேண்டும். அ அஹமட், ஊடக செயலாளர், முஸ்லிம் முற்போக்கு முன்னனி.

யாழில் 2017ஆம் ஆண்டு குழந்தைகள் பிறப்பு வீதம் அதிகரிப்பு..!

(யாழில் 2017ஆம் ஆண்டு குழந்தைகள் பிறப்பு வீதம் அதிகரிப்பு..!) யாழ்ப்பாணத்தில் 2017ஆம் ஆண்டு குழந்தைகள் பிறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2017ஆம் ஆண்டு யாழ்.போதனா மருத்துவமனையில் 5,746 குழந்தைகள் பிறந்துள்ளன. இது 2016ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளின்…

பொது­ஜன பெர­மு­ன உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அங்­கு­ரார்ப்­பண நிகழ்வும் மகிந்த ராஜபக்சவின் முழு உரையும்.

(பொது­ஜன பெர­மு­ன உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அங்­கு­ரார்ப்­பண நிகழ்வும் மகிந்தவின் முழு உரையும்.) ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆகி­யன இணைந்து அமைத்­துள்ள நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டை சீர­ழி­வின்பால் இட்டுச் செல்­கி­றது. அதி­லி­ருந்து நாட்­டைப்­பா­து­காப்­ப­தற்கே பொது­ஜன பெர­முன தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளது. எனவே…

தோல்வியடையும் தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர் பதவிகளை இழக்க நேரிடும்

(தோல்வியடையும் தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர் பதவிகளை இழக்க நேரிடும்) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தங்கள் தேர்தல் தொகுதிகளில்  தோல்வி அடையும் தொகுதிஅமைப்பாளர்கள் தங்கள் அமைப்பாளர் பதவிகளை இழக்க நேரிடும் எனஐக்கிய தேசிய தலைவர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. கட்சி தலைமையகம் சிரிகொத்தவில் இடம்பெற்ற தொகுதிஅமைப்பாளர்கள் கூட்டத்தில் இந்த விடயத்தை பிரதமர் கூறியதாகஅமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பாதுக்க பள்ளிவாசல் மீது நள்ளிரவில் கல் வீச்சு

(பாதுக்க பள்ளிவாசல் மீது நள்ளிரவில் கல் வீச்சு) பாதுக்க,கலகெதர பள்ளிவாசல் மீது நள்ளிரவில் இனந்தெரியாதோர் கல் வீசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பள்ளிவாசல் கண்ணாடி சேதமுற்றுள்ள அதேவேளை பொலிசார் விரைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் பின்னணியில் அங்கு இரு பொலிசார் காவல்…

ஆண் துணை இல்லாமல் இனி முஸ்லிம் பெண்கள் “ஹஜ்“ செல்லமுடியும் ; மோடி ஜி அறிவிப்பு

(ஆண் துணை இல்லாமல் இனி முஸ்லிம் பெண்கள் “ஹஜ்“ செல்லமுடியும் ; மோடி ஜி அறிவிப்பு) ஒரு முஸ்லீம் பெண்கள் ஒரு மஹ்ரமான ஆண் பாதுகாவலர் இல்லாமல் ஹஜ்பயணம் மேற்கொள்ள தங்கள் அரசு அனுமதி வழங்குவதாக அறுவித்துள்ளார். இதன் மூலம்  ஒரு பாகுபாடு நடைமுறையில் இருந்து  நீக்கப்பட்டது என அவர்குறிப்பிட்டுள்ளார். பல தசாப்தங்களாக இத்தகைய “அநீதி” எவ்வாறு முஸ்லிம் பெண்களுக்குவழங்கப்பட்டது என்பதைக் குறித்து ஆச்சரியப்பட்டதாக கூறியுள்ள அவர்சிறுபான்மை விவகார அமைச்சகம் சரியான தீர்வை வழங்கியதுடன்,கடந்த70 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஒரு மரபுவழியை நீக்குவதன் மூலம்இந்த தடைகளைத் தீர்த்துவைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலித்தீன் பாவனை இன்று முதல் முற்றாக தடை

(பொலித்தீன் பாவனை இன்று முதல் முற்றாக தடை) உக்கிப் போகாத பொலித்தீன் உட்பட பொலித்தீன் உற்பத்தியும் அதன் பாவனையும் இன்று முதல் முற்றாக தடை செய்யப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது. தேசிய, மத கலாசார அரசியல் வைபவங்கள் உள்ளிட்ட எந்தவிதமான…