ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவராக அமைச்சா் பைசா் முஸ்தபா
(ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவராக அமைச்சா் பைசா் முஸ்தபா) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவராக அமைச்சா் பைசா் முஸ்தபா தெரிவுசெய்யப்பட்டாா். அவரது இல்லத்தில் நேற்று (24) புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீ.ல சு கட்சி முஸ்லிம்…
இலங்கை முஸ்லிம் இளைஞர்களுக்கு இந்தியாவில் அரசியல்துறை பயிற்சி
(இலங்கை முஸ்லிம் இளைஞர்களுக்கு இந்தியாவில் அரசியல்துறை பயிற்சி) அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அங்கத்தவர்களுக்கும் தொண்டர்களுக்கு அரசியல்துறை தொடர்பாக இந்தியாவில் பயிற்சிகளை வழங்குவதற்கு அகில இந்திய முஸ்லிம் லீக் தயாராக இருப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளரும் மற்றும்…
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு
(ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு) ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் (21) சனிக்கிழமை காலை கொழும்பு – 05நாரஹேன்பிட்டி, பொல்ஹென்கொட இலக்கம் 163, கிருலபன எவன்யூவில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. போரத்தின்…
இலங்கையில் மின்சாரத்தினாலான நவீன முச்சக்கரவண்டிகள்
(இலங்கையில் மின்சாரத்தினாலான நவீன முச்சக்கரவண்டிகள்) இலங்கையில் மின்சாரத்தினாலான நவீன முச்சக்கரவண்டிகள் யப்பான் கம்பணியில் அனுசரனையுடன் உற்பத்தி செய்து 2020 ஆம் ஆண்டில் அறிமுக்பபடுத்தப்பட உள்ளது. இதற்காக 2018 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்ப்பட்ட சுற்றுலாப்பிராயண நட்பு ரக்-ரக் என்ற திட்டத்தின் கீழ்…
புதிய தேர்தல் முறையை ரத்து செய்ய மஹிந்தவின் உதவியை பெற முஸ்தீபு
(புதிய தேர்தல் முறையை ரத்து செய்ய மஹிந்தவின் உதவியை பெற முஸ்தீபு) புதிய தேர்தல் முறையில் சிறுபான்மைக்கு பாதிப்பை தவிர்க்க தலையிடுமாறுகோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முக்கிய கலந்துரையாடல்ஒன்றை நடத்தவுள்ளதாக பொதுஜன பெரமுன முஸ்லிம் முற்போக்குமுன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், புதிய கலப்பு தேர்தல் முறையில் சிறுபான்மையினருக்கு பாரிய பாதிப்பு ஏற்படும்அபாயம் அனைத்து தரப்பினாலும் அன்று சுட்டிக்காட்டப்பட்டது.புதிய தேர்தல்முறைக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ அணியே அன்று பாராளுமன்றத்தில்வாக்களித்திருந்தது. புதிய தேர்தல் முறையில் சிறுபான்மை மக்கள் பாதிப்படைவார்கள் என்பதைஅன்றே நாம் சுட்டிக்காட்டினோம்.ஆனால் அன்று அதற்கு ஆதரவாக வாக்களித்தசிறுபான்மை கட்சி தலைவர்கள் இன்று ஒப்பாரி வைக்கின்றனர்.இன்றுபாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பெரும் சக்தியாக விளங்கும் மஹிந்தஅணியின் உதவியை கொண்டே மிக இலகுவாக மீண்டும் பழைய முறையில்தேர்தலை நடத்த செய்ய முடியும். எனவே சிறுபான்மை மக்கள் எதிர்கொண்டுள்ள பாரிய அநீதியை நிவர்த்திசெய்ய உதவக்கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முக்கியகலந்துரையாடல் ஒன்றை எதிர்வரும் தினங்களில் நடத்தவுள்ளதாக பொதுஜனபெரமுன முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல்சத்தார் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் JVP அங்கம் வகித்துகொண்டு 20 வது திருத்தத்தை கொண்டுவருவது நகைச்சுவை
(அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் JVP அங்கம் வகித்துகொண்டு 20 வது திருத்தத்தை கொண்டுவருவது நகைச்சுவை) அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் JVP அங்கம் வகித்துகொண்டு 20 வதுதிருத்தத்தை கொண்டுவருவது நகைச்சுவை என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம்வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்புநேற்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டுவரப்போவதில்லை. மாறாக வடக்கிலுள்ள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கே புதிய அரசியலமைப்பை கொண்டுவரவுள்ளதாக கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. மேலும் மக்களை ஏமாற்றிக்கொண்டு ஆட்சிக்கு வந்தநல்லாட்சி அரசாங்கம் வடக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லை. அரசியலமைப்பின் இருபதாவது திருத்தச் சட்டம் கொண்டுவர வேண்டியஅவசியம் இல்லை. ஏனெனில் அரசியலமைப்பை மாற்றுவதற்காகவே அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேசத்திடம் தெரிவித்துள்ளார். அவ்வாறெனின் ஏன் அரசியலமைப்பின் இருபதாவது திருத்தச் சட்டத்தைகொண்டுவர முனைய வேண்டும். அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில்மக்கள் விடுதலை முன்னணியும் அங்கம் வகிக்கிறது. ஆகவே வழிநடத்தல்குழுவிலேயே அது குறித்து பேசித் தீர்மானித்திருக்கலாம். அதனைவிடுத்துஇருபதாவது திருத்தம் கொண்டுவரப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே நல்லாட்சி அரசாங்கம் அரசியலமைப்பை மாற்றப்போவதில்லை.வடக்கிலுள்ள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கே புதிய அரசியலமைப்பு கொண்டுவரவுள்ளதான கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது.மேலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றிக்கொண்டே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. தற்போதும் அவ்வாறான செயற்பாடுகளையேமேற்கொள்கிறது. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்கின்ற நிலைப்பாடு அரசாங்கத்திடம் இல்லை. இந்தியப் பிரதமர் இணைய வழிமூலம் நேரடியாகபேசுவதென்றாலே யாழ்ப்பாணம் செல்லும் ஞாபகம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வருகிறது. இல்லையென்றால் அவர்கள் அங்கு செல்வதுமில்லை,அப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதுமில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் ஒருபோதும் பதாளஉலகக் குழுக்களை இணைத்துக்கொண்டு ஆட்சி நடத்தவில்லை. ஆனால் தற்போதைய நிலை எவ்வாறுள்ளது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். அத்துடன் தற்போதைய ஜனாதிபதி, தான் இரவு பத்து மணிக்கு உறக்கத்திற்குச்சென்று காலை எட்டு மணிக்கு எழுந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.எனினும்வேறு நாடுகளிலுள்ள அரசியல் தலைவர்கள் நீண்ட நேரம் பணியாற்றுவதனை அறிந்துகொள்ள முடிகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ24 மணி நேரமும் நாட்டுக்காக சேவையாற்றுபவராக இருந்தார். மேலும் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் அறிக்கைக்குஇணங்க அர்ஜுன் அலோசியஸ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.ஆகவே அதுகுறித்து பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டும். எனினும் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பத்திரிகைச் செய்தி ஒன்று தொடர்பில் விவாதம்நடத்துகின்றனர். அவ்விவாதத்தின் போது பாராளுமன்றத்தின் கோரத்தைக்கூட பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. அத்துடன் “நியூயோர்க் ரைம்ஸ்” பத்திரிகைச் செய்தி விவகாரம் குறித்து நாள்ஒன்றுக்கு ஐந்து மில்லியன் ரூபா செலவு செய்யப்படுவதாக ஊடகம் ஒன்றுதெரிவித்துள்ளது. எனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உட்படஎமக்கு சேறு பூசுவதற்கே குறித்த நிதியை செலவு செய்கின்றனர். மேலும்கடந்த தேர்தல் காலத்தின்போது தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சிக்கு சில தரப்பினர் நிதி வழங்கியுள்ளமை தெரிய வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் முதலாவது கொழும்பு மாவட்ட ஒன்றுகூடல்
(ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் முதலாவது கொழும்பு மாவட்ட ஒன்றுகூடல்) இன்று (24.07.2018) ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் முதலாவது கொழும்பு மாவட்ட ஒன்று கூடல் முன்னால் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் பிரேமசிறியின் தலைமையில் கொழும்பில்…
புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய கட்டடத்தைத் தடுப்பதற்கு அமைச்சர் ஒருவர் சதி” – பிரதி அமைச்சர் பைசல் காசீம்
(“புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய கட்டடத்தைத் தடுப்பதற்கு அமைச்சர் ஒருவர் சதி” – பிரதி அமைச்சர் பைசல் காசீம்) புத்தளம் தள வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள 1200 கட்டிகள்கொண்ட ஆறு மாடிக் கட்டடங்களைத் தடுப்பதற்கு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் சதி செய்கின்றார் என்று சுகாதார,போசனை மற்றும்…
மகிந்த – கோத்தபாய – சம்பந்தன் சந்தித்து பேச்சு
(மகிந்த – கோத்தபாய – சம்பந்தன் சந்தித்து பேச்சு) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று முன்தினம் மாலை கொழும்பில் இடம்பெற்றுள்ளது. சீன இராணுவத்தின் 91வது சம்மேளனம் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில்…
அக்குறணை இளைஞர்களின் முன்மாதிரி
(அக்குறணை இளைஞர்களின் முன்மாதிரி) இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஈராக் நாட்டின் பக்தாத் பல்கலைகழக பேராசிரியர் ஒருவரது இரண்டு இலட்சம் ரூபாவிற்கும் அதிக வெலிநாட்டு பணம் மற்றும் அடையால அட்டை உற்பட முக்கிய ஆவனங்கள் உள்ளடங்கிய கைப்பை கண்டிநகரில் விழுந்திருக்கையில் கண்டெடுத்த…