• Sat. Oct 11th, 2025

கல்முனை என்பது நகரம் அல்ல, இலங்கை முஸ்லிம் அடையாளம்

Byadmin

Feb 28, 2019

(கல்முனை என்பது நகரம் அல்ல, இலங்கை முஸ்லிம் அடையாளம்)

அண்மைக்காலமாக கல்முனை மாநகரத்தை பிரிப்பதா?, இருப்பதை ஏற்பதா? என்ற வாதங்களும் பேச்சுவார்த்தைகளும் பல மட்டங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அப் பிரதேசத்தைச் மனதாற விரும்பும் ஒருவன் என்ற அடிப்படையில் சில உண்மைகளை முன் வைப்பதற்கான பதிவே இதுவாகும்,

கல்முனை மாநகரம்

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில், உள்ள முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதும் தமிழ், சிங்கள, பறங்கி என்ற அனைத்து இன மக்களையும் கொண்ட ஒரு புராதன நகராகும். 2011 கணக்கெடுப்பின்படி 106780 மொத்த சனத்தொகையைக் கொண்ட இடம். 1987ம் ஆண்டு பல பிரதேசங்களை உள்ளடக்கிய ஒரு பிரதேச சபையாக மாற்றமடைந்து, இன்று மாநகராக உள்ளது

#வரலாறு,

இப்பிரதேச மக்கள் மிகப்புராதன வரலாற்றைக்கொண்டிருந்தாலும், போர்த்துக்கேய காலத்தில் கொழும்பில் இருந்த முஸ்லிம்களுக்கான அச்சுறுத்தல் இருந்த வேளையில் கண்டி மன்னர்களான, செனரத்,ராஜசிங்கன் போன்றோரின் காலத்தில் Royal farm என்ற கல்முனை நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 8000 க்கு மேற்பட்டோர் மக்களினதும், நாட்டினதும் பாதுகாப்பு கருதி குடியமர்த்தப்பட்டனர், அது இன்று பல மாற்றங்களைக் கண்டிருக்கின்றது,

#வளர்ச்சியும்_குறைபாடுகளும்,

2001ல் மாநகராக தரமுயர்ந்த இப்பிரதேசத்தில் ,பெயருக்கேற்ற வளர்ச்சி இடம்பெறவில்லை, பல பிரதேசங்களில் அபிவிருத்திப் பட்டினி நிலவியது, வளப்பகிர்விலும் குறைபாடு ,அரசியல் குரோத மனப்பாங்கு, பிரதேசவாதம் என்பன அபிவிருத்திக்கான தடைகளாக இருந்தன, அத்தோடு உரிமை அரசியல் செயற்பாட்டில் போராளிகளின் உருவாக்கமும் அபிவிருத்தியைத் தாண்டிய சமூக ஈடுபாட்டைக் கொண்டு வந்திருந்த்து,

இதனால்,நற்பிட்டிமுனை, ,சேனைக்குடியிருப்பு, சாய்ந்தமருது, இஸ்லாமாபாத், மருதமுனை கல்முனை என பல பிரதேங்களும் ஏதோ ஒரு வகையில் புறக்கணிக்கப்பட்டன, மக்கள் அபிவிருத்தியையும் ,வளமான வாழ்வையும் எதிர்பார்த்தனர், ஆனாலும் ஒரு உள்ளூராட்சி அதிகார அலகு என்ற வகையில் வீதிகள், கழிவகற்றல், வடிகான் பரிபாலனம், பொதுமக்களுக்கான பொழுது போக்கு என்பனவற்றை உரிய முறையில் வழங்க கல்முனை மாநகரம் தவறி இருந்தது, இது எல்லோரினதும் குற்றச்சாட்டாகும்,

கடந்த காலத்திலிருந்து, இன்றுவரை பதவியில் இருந்த 6 முதல்வர்களும், அரசியல் கட்சி உறுப்பினர்களும் இதற்கான பொறுப்பை ஏற்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்,

#இன்றைய_பிரச்சினைகள்,

கல்முனையின் வளப்பகிர்வு, நலனோம்பலில் விரக்தி அடைந்துள்ள சில பகுதிகளில் பிரிந்து செல்லுதல் என்ற கோசம் முன்வைக்கப் படுகின்றது, ஆனாலும் இதற்கான தீர்வு பிரிந்து செல்வதனால் கிடைத்துவிடுமா?? ஏனைய பிரதேசங்களின் நிலை என்ன? என்ற கருத்துக்களுக்கு மத்தியில் அண்மைக்காலமாக பல அரசியல் , சமூக, சமய முன்னெடுப்புக்கள் இடம்பெற்றன,

குறிப்பாக சாய்ந்தமருது பிரதேசத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்றாலும், அவை இப்போதுவரை போதிய முன்னேற்றம் அளிக்கவில்லை,

அண்மையில் அமைச்சர் வஜிர அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களின் கலந்துரையாடல் பிரச்சினையின் மையத்தை மீண்டும் U turn போட்டுள்ளது,

#தீர்வுகள்_என்ன??

உண்மையில் இப்பிரச்சினைகள் அபிவிருத்தி புறக்கணிப்பு ,வளப்பற்றாக்குறையால் ஆரம்பித்தவை, மட்டுமல்ல அரசியல்வாதிகள் அப்பாவி மக்களை தமது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொண்டதன் விளைவுமாகும்,, இதனைத் தீர்ப்பதற்கான வழி, இப் பிரச்சினைகள் வித்தியாசமான கண்ணோக்கில் பார்க்கப்பட வேண்டும் , மாறாக, 4 பிரிப்போ, தனிப்பிரிப்போ அதற்கான தீர்வு அல்ல,

#அகன்ற_கல்முனை என்பது இப்பிரதேசத்தில் வாழ்ந்த பல புத்திஜீவிகளின், அரசியல்வாதிகளின் கனவும் பணியுமாகும், மட்டுமல்ல கல்முனையின் முன்மாதிரியையும், பலத்தையும் முழு இலங்கை முஸ்லிம்களும் நம்பி உள்ளனர், அதனை அழித்து விட யாரையும் அனுமதிப்பது ஆரோக்கியமானதல்ல,

#புத்திஜீவிகளின்_பங்கு,

இப்பிரதேசம் புத்தி ஜீவிகளுக்கு மிகவும் பிரபலமானது, MS காரியப்பர், அஷ்ரஃப், MC அகமது, ARமன்சூர், போன்ற அரசியல்வாதிகளையும்,புகழ்பெற்ற பல புத்திஜீவிகளையும்,மட்டுமல்ல, மிகக் கிட்டிய 8 KM தூரத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தையும் ,கொண்ட பிரதேசம் மட்டுமல்ல, நாடறிந்த பகழ்பெற்ற பலரையும், சர்வதேச மட்டத்தில் நிர்வாகத்துறையில், பாண்டித்தியம் பெற்ற பலரையும் கொண்ட பகுதி, குறிப்பாக மருதமுனைப் பிரதேசம் இந்த புத்தி ஜீவிகள் விடயத்தில் அதிக ஆள்பலத்தைக் கொண்டுள்ளது,

ஆனாலும் குறித்த கல்முனை நகருக்கான சரியான தீர்வும், அப்பிரதேசத்தின் பிரதான பிரச்சினைகளும் சரியாக அடையாளம் காணப்பட வில்லை ,இதனை அனைவரும் என்றே ஆக வேண்டும்

,இந்நிலையில் சமய, சமூக வாதிகளும், பாமர மக்களும் பல கோரிக்கைகளை முன்வைத்துப் ,தமது ஊர்களின் நன்மையை மட்டுமே முன் வை
த்து போராட முன்வருகின்றனரே தவிர அனைத்து ஊர்களுக்குமான ,பொதுத்திட்டமோ, தீர்வோ இதுவரை முன் வைக்கப்பட வில்லை, எல்லோரும் அரசியல் வாதிகளை நம்பியும், விமர்சித்துக் கொண்டும் இருக்கின்றோம்,

ஆனால் உண்மையான கல்முனையின் பிரச்சினைகள் இதுவல்ல என்பதே எனது முடிவு, மாறாக கல்முனையின் இன்றைய பிரதான பிரச்சினை மக்களது வாழிடத்திற்கான, #நிலப்_பற்றாக்குறையே ஆகும், அடுத்த தலை முறைக்கான நிலத் தீர்வு என்ன? ,என்பது பற்றி யாரும் கவனத்திற் கொள்வதில்லை, அதற்கான முயற்சிகளும் எந்த மட்டத்திலும் இடம்பெற வில்லை ,இது அனைத்து ஊர்களினது மட்டுமல்ல, குடும்பங்களினதும் பிரச்சினை.

#கல்முனை_என்பது_எம், #எல்லோரினதும்,#அடையாளம்,

கல்முனை தனக்குள்ளே பல ஊர்களை உள்ளடக்கி இருந்தாலும், அதுவே அனைவரதும் பொது அடையாளமாகவும் உள்ளது, இதற்கு பல நடைமுறை, வரலாற்றுச் சான்றுகள் ஆதாரமாக உள்ளன, அவ்வாறான கல்முனை அதன் மக்களினதும் இருப்புக்கான வாழ்வியல் அடையாளமாக மட்டுமல்ல , அது இலங்கை முஸ்லிம்களின் ஒரு தனித்துவ அடையாளமுமாகும்,

அதனைத் துண்டு போட்டு சிதைப்பதை விட எல்லோரும் ஒன்று சேர்ந்து முன்னேற்றுவதற்கான திட்டங்களை எல்லா ஊர்களும் ,முன்வைக்க வேண்டும் அதற்காக பள்ளி வாசல்களும்,உலமாக்களும், புத்திஜீவிகள் முன்வரவேண்டும்,

இவ்வாறு கல்முனையின் உண்மையான பிரச்சினைகள் சரியாக அடையாளங் காணப்படுமாயின் அத் திட்டங்களை பொதுத்திட்டமாக்கி, அரசியல்வாதிகளூடாக அவற்றை நிறைவேற்றித் தர எல்லோரும் இணைந்து அழுத்தம் கொடுக்க முடியும், அதற்கு அனைத்து ஊர்களிலும் உள்ள புத்திஜீவிகள் , ,உட்பட ஏனையவர்களையும் உள்ளடக்கிய ஒரு பொதுச்சபை அமைக்கப்பட்டு அது தமது பிரச்சினைகளையும், தீர்வுகளையும் மக்களிடம் இருந்து அறிந்து, ஏக தீர்மானமாக்கி அவற்றை அனைத்து அரசியல்வாதிகளையும் ஒன்றாக அழைத்து கல்முனையின் கோரிக்கையாக முன்வைக்க முடியும்,

#முன்மாதிரி_நடவடிக்கை.

கல்முனை அப்பிரதேச மக்களினது மாத்திரமல்ல இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றிலும் முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது,

அந்த வகையில் அதற்காக உழைப்புச் செய்த பலர் கிழக்கிற்கு வெளியிலும் உள்ளனர், அந்தவகையில், அறிஞர் ஏ.எம் ஏ. அஸீஸ் (AMA Azeez )அவர்கள் மறக்க முடியாதவர் மட்டுமல்ல, ஒரு புத்திஜீவியினால் சமூகப் பிரச்சினைகளை எவ்வாறு முன் நின்று தீர்க்க முடியும் எனச் செய்தும் காட்டியவர், அவர் வடக்கை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவர்,அவரது சேவையை இன்றைய அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பின்பற்றாமையும், சோம்பறித் தனமான செயற்பாடுகளுமே, இவ்வாறான பிரச்சினைகளுக்கான இன்னுமொரு காரணம் எனலாம்,

#அஸீஸும்_கல்முனையும்,

அறிஞர்,AMA Azeez 1942 ம் ஆண்டு கல்முனைக்கான அவசரகால AGA ஆக நியமிக்கப்பட்டதில் இருந்து இப்பிரதேசத்தில் Emergency காரியாலயத்தை ஆரம்பித்ததோடு, 10000, க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை பகிர்ந்து அளித்ததுடன், இப்பிரதேசத்தின் தலைமைக் காரியாலயத்தை கல்முனையின் Rest house ல் தற்காலிகமாக இயக்கி, மிக வேகமாக இயங்கினார்,

2ம் உலக மகாயுத்த காலத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தில் இன்றும் செல்வாக்குச் செலுத்துகின்றன, அவர் மக்களோடு மக்களாக, நின்று செயற்பட்டார், பிரதேசவாதம்,இனவாதம் படித்தவன், பாமரன் பார்க்கவில்லை,

அதே போல KALMUNAI Muslim Educational Society (kMES) ,என்பதை ஆரம்பித்து, இப் பிரதேச கல்விக்கு பாரிய உதவி புரிந்தார், அவர் 5 April 1942 ல் பதவி ஏற்றதில் இருந்து 2 வருடங்கள் பம்பரமாக வேலை செய்தார்,

1943 ல் இலங்கையிலேயே முதன்முதலாக போர்க்கால #விவசாயப்புரட்சியை கல்முனையில் செய்து காட்டினார், அதற்கான அதிதியாக கௌரவ DS சேனநாயக்கவை அழைத்து வந்து பாராட்டுப்பெற்றதோடு அக்கால தேசாதிபதியான Sir Anders Caldecatt அவர்களின் பாராட்டையும் நிலப் பரிசுகளையும் இப்பிரதேச மக்களுக்கு வாரி வழங்கினார்,

இவ்வாறு ஒரு புத்தி ஜீவி, அரச அதிகாரி,பல புதிய திட்டங்களை மேற்கொண்டதன் விளைவே இன்றைய கல்முனையினதும், மக்களினதும் வாழ்வாதார வளர்ச்சியின் அடிப்படையாகும், இப்படி எப்போதாவது நாம் சிந்தித்தோமா? செயற்பட்டோமா?

#எமது_பணி_என்ன, ?

கல்முனை மாநகர எல்லைக்குள் வாழும் அனைத்து இன மக்களும் , ஊர்களும் பிரிவினையை நாடாமல் எமது மாநகரத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை முன்வைப்பதுடன், இதன் வரலாற்றையும் ,மாநகர மக்கள் என்ற அடையாளப் பெருமையையும் காப்பாற்ற பொது மக்கள் முன்வருவதுடன், அதற்கான தம்மாலான அர்ப்பணிப்பை சோம்பறித்தனமின்றியும், அரசியல் , பிரதேசவாத மன நிலை இன்றி செயற்படவும், மக்களை பிழையான வழிகளில் தூண்டாமல் இருக்கவும் அரசியல் கட்சித்தலைவர்களும் ,உள்ளூர் அரசியல்வாதிகளும், சமூகத் தலைவர்களும் முன்வர வேண்டும்,

அதேபோல்,இப்பிரதேசத்தில் வாழும் புத்தி ஜீவிகள் வேற்றுமை மன நிலையின்றி #மாநகரின்_வளர்ச்சி என்ற கோசத்தின் கீழ் மனந்திறந்து செயற்பட முன்வர வேண்டும், ஆய்வுகளை மேற்கொண்டு தீர்வுகளை முன்வைக்க வேண்டும், அதன்மூலமே இந்த நீண்டகால அவலத்திற்கான உரிய தீர்வு கிடைக்கும்,

இன்றேல் இப்பிரச்சினைகளின் மூலம் இடம்பெறும் சமூகச் சீரழிவுகளுக்கும்,பிரதேச மோதல்களுக்கும்,அப்பாவிகளின் அன்றாடப் பிழைப்பில் ஏற்படும் நட்டத்திற்கும், அபிவிருத்திப்பட்டினிக்கும் படித்தவர்களாகிய , நாமும் ஒரு காரணமாக அமைந்து விடலாம்,

#சிந்திப்போம்,#வானுயர்_மாநகரத்தை

#வடிவமைக்கமுன்வருவோம்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *