(பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பு)
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிப்பதை தடுத்து நிறுத்தி வழங்கப்பட்டுள்ள தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் செப்டம்பர் 11 ஆம் திகதி வரை நீடித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் திவிநெகும திணைக்களத்திற்கு சொந்தமான இரண்டு கோடியே 94 லட்சம் பணத்தை செலவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்துடன் கூடிய 50 லட்சம் நாட்காட்டிகளை அச்சிட்டு விநியோகித்ததாக பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.