• Fri. Nov 28th, 2025

புதிய தேர்தல்கள் ஆணையாளராக ரசிக பீரிஸ்

புதிய தேர்தல்கள் ஆணையாளராக ரசிக பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றார்.

“இனி எமது நாட்டில் இனவாதத்திற்கு இடமில்லை” – ஜனாதிபதி

முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது தனக்குத் தெரியவந்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். (13) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின்…

எதிர்பார்க்கப்பட்டதை விட 100 பில்லியனுக்கும் அதிகமான மேலதிக வருமானம்

2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகள் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை விட ரூபா 100 பில்லியனுக்கும் அதிகமான மேலதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 2026 ஆம் ஆண்டிற்கான எதிர்கால நிதிசார் திட்டங்களை…

ஒட்டிப் பிறந்துள்ள இரட்டைக் குழந்தைகள், 3 மாதங்களுக்குப் பிறகு பிரிக்க நடவடிக்கை

காசல் வீதி பெண்கள் மருத்துவமனையில் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. பன்னலவைச் சேர்ந்த 29 வயதுடைய தாயார், சிசேரியன் மூலம் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இரட்டைக் குழந்தைகள் 4.4 கிலோ எடையும் கொண்டதாக இருந்தனர். மருத்துவமனை பணிப்பாளர்…

இலங்கையில் 8 நபர்களுக்கு ஒரு நாய்

🔴 இலங்கையில் வருடாந்தம் 250,000க்கும் அதிகமானோர் நாய்க் கடிக்கு ஆளாகின்றனர். 🔴 20 முதல் 30 இலட்சம் தெரு நாய்கள் உள்ளதாக மதிப்பீடு 🔴 8 நபர்களுக்கு ஒரு நாய் 🔴 நாட்டில் தற்போது தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருவதால்,…

விபத்தில் உயிரிழப்பு

ஹொரவ்பொத்தானை – கட்டை பகுதியில் (13) இடம்பெற்ற விபத்தில் 19 வயதான எஹியா உல்முதீன் சஹீல் அஹமட் உயிரிழந்துள்ளார். தம்பலகாமம் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு சென்ற பஸ் – மோட்டார் சைக்கில் மோதலினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் உடல், திருகோணமலை பொது…

தபால் மூலம் மக்களுக்கு தேசிய பிறப்புச் சான்றிதழ்

இலங்கை தபால் சேவை மூலம் மக்களுக்கு தேசிய பிறப்புச் சான்றிதழ்களை நேரடியாக வழங்குவதற்கான திட்டத்தை புதன்கிழமை (12) ஆரம்பித்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவின் தலைமையில் கம்பஹா மாவட்ட செயலகத்தில் இந்த முயற்சி தொடங்கப்பட்டது.…

ஆப்கான் – மேற்கிந்திய தீவுகள் மோதும் டி-20 தொடர் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடரை அடுத்த வருடம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த இரு அணிகளுக்கு இடையிலான டி-20 தொடர் அடுத்த வருடம் ஜனவரி 19 ஆம் திகதி சார்ஜாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் 21 மற்றும்…

வெலிகம பிரதேச சபை: புதிய உறுப்பினரின் பெயர் வர்த்தமானியில் வெளியீடு

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா என்பவர், லசந்த விக்ரமசேகரவின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில், வெலிகம பிரதேச சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் விதமாக அவரது பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துகளில் 5 பேர் பலி!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு வீதி விபத்துக்களில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (11) தம்புத்தேகம, கஹவத்தை, சிரிபுர, கொக்காவெவ மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில்…