மு கா தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.எம்.நஸீர் நியமனம்
(மு கா தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.எம்.நஸீர் நியமனம்) முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்றஉறுப்பினராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீர்நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை, மடவளை நியுசுக்கு அவர் சற்றுமுன்உறுதிப்படுத்தினார். மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்றஉறுப்பினராகப் பதவி வகித்த எம்.எச்.எம். சல்மான் கடந்தவாரம், அந்தப் பதவியினை ராஜிநாமா செய்திருந்த நிலையில்அதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனைக்கு கடந்த 15 வருட காலமாகதேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிவழங்குவதாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கூறி வந்தபோதிலும், தற்போதுதான் அந்த வாக்குறுதிநிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ள நசீர், 2011ஆம்ஆண்டு அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம்காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டதன் மூலம் அரசியலுக்குள்பிரவேசித்தார். அந்த தேர்தலில் வெற்றி பெற்ற அவர், அட்டாளைச்சேனைபிரதேச சபையின் தவிசாளராகப் பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டவர், அதிலும் வெற்றி பெற்றதோடு,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகவும் பதவிவகித்திருந்தார்.
இலங்கை வீரர்கள் மேஜிக் பந்து வீச்சு… பங்களாதேஷ் 82 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது
(இலங்கை வீரர்கள் மேஜிக் பந்து வீச்சு… பங்களாதேஷ் 82 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது) பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. முஷ்பிக்குர் ரஹ்மாணின் 26…
மதில் வீழ்ந்து, குழந்தை மரணம்
(மதில் வீழ்ந்து, குழந்தை மரணம்) அநுராதபுரம் மயிலகஸ்சந்தி பகுதியில் மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இரண்டு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அநுராதபுர பொலிசார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் புறத்தில் அமைக்கப்பட்டிருந்த…
யாழ்ப்பாண முஸ்லீம்களிற்கு 700 வீடுகள் அமைக்கப்படும்-விஜயகலா மகேஸ்வரன்
(யாழ்ப்பாண முஸ்லீம்களிற்கு 700 வீடுகள் அமைக்கப்படும்-விஜயகலா மகேஸ்வரன்) யாழ் மாநகரசபை தேர்தலில் 13 ஆம் வட்டாரத்தில் ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து வேட்பாளராக போட்டியிடும் சமூக சேவகர் கே.எம் நிலாமை ஆதரித்து இன்று(24) மாலை …
பொதுஜன பெரமுன வேட்பாளர் மீது தாக்குதல்
(பொதுஜன பெரமுன வேட்பாளர் மீது தாக்குதல்) அக்கரப்பத்தனை வெவர்லி தேர்தல் வட்டாரத்தில் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு தாமரை மொட்டு சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிடும் எஸ்.ராஜ்குமார் மீது தாக்குதல் மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஆதரவாளர்கள் இருவர் கைது…
தேசிய அரசு நீடிக்குமா_ பதில் வழங்கவுள்ள ரணில்
(தேசிய அரசு நீடிக்குமா_ பதில் வழங்கவுள்ள ரணில்) தேசிய அரசாங்கத்தை நிறுவும் நோக்குடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஆளும்…
ஷபீக் ரஜாப்தீன் ராஜினாமா!
(ஷபீக் ரஜாப்தீன் ராஜினாமா!) கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவருமான ஷபீக் ரஜாப்தீன், அப்பதவிகளில் இருந்து இன்று (24)…
ஜனாதிபதி செயலாளரை நாடாளுமன்றத்துக்கு அழைக்கத் தீர்மானம்
(ஜனாதிபதி செயலாளரை நாடாளுமன்றத்துக்கு அழைக்கத் தீர்மானம்) ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவை நாடாளுமன்றத்துக்கு அழைத்து விசாரிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் பிணைமுறிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த அறிக்கையில் சுமார் 103…
தேர்தல் பாதுகாப்பு_ களத்தில் இராணுவத்தினர்
(தேர்தல் பாதுகாப்பு_ களத்தில் இராணுவத்தினர்) உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்கு அவசியம் ஏற்படின் இராணுவத்தின் உதவி பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கால பாதுகாப்பு தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும்…
சம்மாந்துறை மாணவனின் புதிய கண்டுபிடிப்பு…!
(சம்மாந்துறை மாணவனின் புதிய கண்டுபிடிப்பு…!) யாழ். பல்கலைக்கழக தொழிநுட்ப பீட முதலாம் வருட மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் தாய்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்பு போட்டி மற்றும் கண்காட்சியில் பங்குபற்றுவதற்கு தெரிவாகியுள்ளார். இப்போட்டியும் கண்காட்சியும் பெப்ரவரி 1ஆம் திகதி தொடக்கம்…