அரசாங்கத்தின் செயற்றிட்டங்களுக்கு அமைய முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
குருணாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அண்மையில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கண்டி அபிவிருத்தி செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் குருணாகல், சிலாபம், காலி, மாத்தறை ஆகிய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
காலி, மாத்தறை பிரதேசங்களில் கூடுதல் வருமானம் ஈட்டக்கூடிய சுற்றுலா வலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. கைத்தொழில் வலயம் ஒன்றும் அங்கு உருவாக்கப்படும். மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதலாம்கட்டம் கொழும்பிலிருந்து கண்டி வரை நிரமாணிக்கப்படுவதுடன் இரண்டாம் கட்டம் குருணாகல் வரை நீடிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பிங்கரிய, இரணவில ஆகிய பிரதேசங்களிலும் கைத்தொழில், சுற்றுலா வலயங்கள் ஸ்தாபிக்கப்படு;ம் என்றும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.